Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

19இற்கான நீதிமன்ற தீர்ப்பு பற்றிய சிலரது விமர்சனங்கள்


gamilni column-1

- காமினி வியன்கொட

 

19 என்பது கழன்று விடுமளவிற்கு மிகவும் பலவீனமாகவுள்ள ஒரு இளம் பல்லொன்றின் நிலையை ஒத்ததாகும். அந்தளவுக்கு எதிரணியினரதும் அரசாங்கத்தின் ஒரு சில பங்காளிகளினதும் மிருகத்தனத்துக்கு அது இலக்காகியிருக்கிறது. தேர்தல் முறை மாற்றத்தோடு அதனை கொண்டு வருவதாக இருந்தாலன்றி 19வது அரசியல் திருத்தத்துக்கு வாக்களிப்பதில்லையென்ற எதிரணியினரின் போராட்டம் தற்போது மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் தொடர்பாக கண்டறிய முற்படும் முயற்சியை 19ஐ எதிர்ப்பதற்கு காரணமாக்கிக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது. 19 பற்றி விவாதிப்பதற்கிருந்த தினத்துக்கு முன் தினம் இரவு விடியும் வரை எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களது அணியொன்று பாராளுமன்றத்தினுள் அமர்ந்து கொண்டார்கள். உரிமைகள் தொடர்பாக வேறிடங்களில் அமர்கின்ற அங்கத்தினர்களை மிருகத்தனமாக கலைக்கும் அதிகாரிகள் இந்த சந்தர்ப்பத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் நாகரிகமான முறையிலாகும். ஜனநாயக முன்னணியிலாகும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அண்ணனான சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த அணியினருக்கு இரவை வெளிச்சமாக்க அவசியமான அனைத்து விடயங்களையும் செய்து கொடுத்திருந்தார். இறுதியாக 19ஐ விவாதத்திற்கெடுத்துக் கொள்வது ஒருவார காலத்திற்குப் பிற்போடப்பட்டது.

இவ்வாறே எதிரணியினர் முற்று முழுதாகவே 19ஐ தோற்கடிக்கச்  செய்து ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு சண்டித்தனம் புரிந்து வரும் நிலையில் அரசாங்கத்திலுள்ள ஒருசில பங்காளிகள் 19ல் அடங்கியிருக்கும் அரசியல் அபிலாஷைகளை கொச்சைப்படுத்தி நடைமுறையிலுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையே வேறொரு முறையில் அமுல் படுத்துவதற்கு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விடயத்தை தெளிவுபடுத்துவதற்கு சதி என்ற சொல்லை பயன்படுத்துவது அறுவருக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றபோதிலும் 19 தொடர்பில் பாரிய சதியொன்று இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்று வருவது மிகத் தெளிவானது. இது எதிரணியால் தனியாக மேற்கொள்ளும் ஒன்றல்ல. அரசாங்கத்திலுள்ள ஒரு சில பங்காளிகளது ஆசிர்வாதமும் இதற்கு உள்ளது.

19 தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தினால் எதிர்க்கட்சியினரை விடவும் அரசாங்கத்திலுள்ள ஒரு சில பங்காளிகள் சங்கடத்துக்கு ஆளாகியிருந்தமை மூலம் இது புலனாகிறது. அந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பட்டாசு கொளுத்துவதற்கு முன் இவர்கள் மேற்கொள்ள வேண்டியது உண்மையாகவே நீதிமன்றத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதென்ன என்பது தொடர்பில் தெளிவு பெற்றுக் கொள்வதாகும். 19வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் நீதிமன்றம் சென்றவர்கள் ஒரேயொரு விடயத்தையே வேண்டிக் கொண்டார்கள். அதாவது அந்த திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கு மேலதிகமாக அபிப்பிராய வாக்கெடுப்பொன்றின் மூலம் பெற்றுக் கொள்ளும் அங்கீகாரமொன்றும் அவசியம் என்பது மாத்திரமாகும். அது நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படுவது தற்போதிருக்கும் சட்ட அடிப்படைகளுக்கும் எமது அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கும் உட்பட்டேயாகும். தற்போது இதற்கமைய ஒரு சில விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இணங்கக் கூடியதாக இருப்பதைப் போன்றே இன்னும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கபாட்டுக்கு வர முடியாத நிலையும் இருக்கின்றன. எந்தவொரு தரப்பினதும் எதிர்பார்ப்பு வீணடிக்கப்படுவதாக நீதிமன்றத்தினால் விசேடமாக கருதாத போதிலும் இரு தரப்பினர்களதும் எதிர்பார்ப்புகள் ஓரளவு சமப்படுத்தப்பட்டுள்ளன. அறிந்தோ அறியாமலோ இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி ஒரு சில விடயங்கள் தொடர்பில் அபிப்பிராய வாக்கெடுப்பொன்று அவசியமாகிறதெனவும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப்பலம் போதுமானதென்பதும் நீதிமன்றத்தின் கருத்தாகும். அந்த நிலைமையின்படி அபிப்பிராய வாக்கெடுப்பொன்று அவசியமென கூறும் பிரிவை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மிகுதியை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதியும் பிரதமர் உட்பட அரசாங்கம் தற்போது தயாராகவுள்ளது. இது ராஜபக்ஷ முறைக்கு மாற்றமான புதிய தெரிவொன்றாகும்.

எவ்வாறெனினும் 19க்கு ஆதரவு தெரிவிப்பதைப் போன்றே எதிர்ப்பு தெரிவிக்கவும் நீதிமன்றத்தை நாடியவர்கள் சட்ட ஆணைகளுக்கு மேலதிகமாக எதிர்பார்த்த மேலுமொரு விடயம் உள்ளது. அது அரசியல் தர்மத்தின் உதவியாகும். அவ்வாறானதொன்றை நீதிமன்றத்திடமிருந்து எதிர்பார்க்கக்கூடாதென்ற போதிலும் இரு தரப்பினதும் அறியாமையினால் அவ்வாறான எதிர்பார்ப்பொன்றும் இருந்தது. ஜாதிக ஹெல உறுமய இந்த 19வது திருத்தத்தை எதிர்த்தது, ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவது எமது அரசியலமைப்பு முறையின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முரணாவதென்ற காரணத்தினாலன்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அரசியல் தர்மமென்ற ரீதியில் கௌரவமாகக் கருதும் அவர்களிடையே காணப்பட்ட பணிவு காரணமாகவேயாகும்.

பிரிவினைவாத அச்சுறுத்தல் உள்ள நாடொன்றில் அதிகாரவாத நிர்வாகம் மிகவும் உகந்த அரணாகுமென்ற அவர்களது பெரும்பான்மை நம்பிக்கை இவர்களது இந்தக் கருத்துக்கு வித்திட்டது. அதனால்தான் ஜனநாயகம் தொடர்பிலான சில வளர்ச்சி தொடர்பில் தற்போது அவர்கள் முன்வருகிறார்கள். அனைத்து சிறப்புக்களையும் கைவிட்டாலும் அவர்களுக்கு மிக இலகுவாக முடியுமென்பதை கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். எந்த வரையறைக்குள்ளாயினும் முழு நாடும் அன்போடு தழுவிக் கொண்டுள்ள 17வது அரசியலமைப்புத் திருத்தத்துக்குக்கூட இவர்கள் எதிரிகளாக இருந்தது இதனாலாகும். முழு நாட்டையும் உலுக்கிய 18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு இவர்கள் உயிரை பணயம் வைத்து முன்வந்ததும் ஜெனரல் சரத்பொன்சேகா மற்றும் சிராணி பண்டாரநாயக்க தொடர்பில் மஹிந்த நிர்வாகம் பின்பற்றிய ஒழுக்கமற்ற அரசியலுக்கு இவர்கள் பங்காளிகானதும் அதனாலாகும்.

அவ்வாறாயின் அறியாமல் தான் சிக்குகின்ற எதிர்ப்புகள் ஒருவருக்கு புரிந்து கொள்ள முடியாமலிருக்கும். அண்மையில் அத்துரலிய ரதன தேரர் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். டி.எஸ். சேனாநாயக்க முதல் ஜே.ஆர். ஜயவர்தன வரையிலான அரச தலைவர்கள் முதிர்ச்சி அரசியல்வாதிகள் அல்லர். இவர்களுக்குப் பிறகு அதிகாரத்துக்கு வந்த அரச தலைவர்கள் உதாரணமாக மஹிந்த ராஜபக்ஷ முதிர்ச்சி அரசியல்வாதியா? எமது நாட்டுத் தலைவர்களிடையே காணப்பட்ட முதிர்ச்சியற்ற தன்மையை ஜே.ஆர்.  ஜயவர்தனவோடு இவர் நிறுத்திக் கொண்டது ஏன் என்பது தெளிவில்லாத போதிலும் ஜே.ஆர். ஜயவர்தனவை முதிர்ச்சியற்ற தலைவராக கருதுவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை தொடர்பில் இன்றும் தான் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்குமிடையே பாரிய முரண்பாடுள்ளதென்பதை அவர் அறியாதிருக்கிறார். அந்த ஜே.ஆரினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை தொடர்பாக இன்று முன்னின்று செயற்படுவது தான் என்பதை அவர் ஒரு கணம் மறந்து விட்டிருக்கிறார். அதாவது முதிர்ச்சியற்ற தலைவரொருவரினால் உருவாகியிருப்பது முதிர்ச்சி அரசியலமைப்பா? அந்த வாக்கியத்தின் இறுதியில் உதாரணத்துக்கு முதிர்ச்சி அரசியல்வாதிகள் ஒரு சிலரது பெயர்களை விளங்கிக் கொள்வதற்காக அவர் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் லீகுவான்யுவும் மொஹமட் மஹதீருமாவர்.

ஜாதிக ஹெல உறுமயவின் உண்மையான அரசியல் நிலைப்பாடு இதன் மூலம் தெளிவாகிறது. கடந்த நாட்களில் இலங்கையின் பல்வேறு பத்திரிகைப் பக்கங்களை அலங்கரித்த பரபரப்பாக பேசப்பட்ட உலகின் வறிய ஜனாதிபதியாக முடிசூடிக்கொண்ட உருகுவேயின் முன்னாள் ஜனாதிபதி ஹொசேமுஹிகாவை ஒரு புறமாக வைப்போம். அவர் பைத்தியக்காரராக இருக்கக் கூடும். இல்லையேல் ஜனாதிபதி மாளிகை இருக்க விவசாயப் பண்ணையில் ஒரு சிறிய குடிசையில் வாழ்வாரா? லம்போஹினியை பயன்படுத்த வாய்ப்பிருந்த போதும் பழைய பீட்ல் மாதிரியிலான வொக்ஸ்லகன் காரைப் பயன்படுத்துவாரா? ஆம். அவர் பைத்தியக்காரரே தான். எனினும் அரசியல்வாதிகள் தொடர்பில் முதிர்ச்சி மற்றும் கொள்கை ரீதியான எனும் அடைமொழிச் சொற்களை இணைத்துக் கொள்ளும்போது நெல்சன் மண்டேலா என்பவரது பெயர் இவர்களது வாய்க்கு வராதது தவறுதலாகவா அல்லது வேண்டுமென்றா?

லீகுவான்யூ பின்பற்றி வந்த கொள்கை, கோட்பாடு கட்டியெழுப்பப்பட்டிருந்தது இரு பிரதான அடிக்கற்களின் மீதேயாகும். அதில் ஒன்று கடுமையான ஒழுக்கம். மற்றையது ஜனநாயகம் தொடர்பில் அவரிடம் நிலவி வந்த அவநம்பிக்கையாகும். இவர் ஜனநாயகத்தை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பொருந்தாத வியாதியொன்றாகவே கருதி வந்தார். 2000ம் ஆண்டில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். தனக்கு அசிங்கமான வேலையொன்றை செய்ய வேண்டியேற்பட்டது. வழக்கின்றி நான் மனிதர்களை சிறைக்குள் தள்ளினேன். அவரது கருத்துப்படி அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் இருக்க வேண்டிய ஒழுக்கம் இவ்வாறானதாகும். (சரத் பொன்சேகா தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ பின்பற்றிய வழிமுறையை இப்போது நினைவில் கொள்ளவும்.) எதிர்க்கட்சி அரசியல்வாதியொருவரை வழக்கின்றி 23 வருடங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தது. நீதிமன்றம் பக்கச் சார்பானதென பகிரங்கமாகக் கூறியமையால் எதிர்க்கட்சித் தலைவரை சிறையிலடைத்தல் வரையான கடுமையான கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளென நீண்டது. அவர் 31 வருடங்கள் தொடர்ச்சியாக நாட்டை ஆண்டு வந்தார். மலேசியப் பிரதமர் மொஹமட் மஹதீர் அரசியல் கொள்கை ரீதியில் லீகுவான்யூவுக்கு வேறுபட்டவரல்லர். அவரும் தொடர்ச்சியாக 23 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தார். 18வது திருத்தத்தின்மூலம் மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்ததும் அவ்வாறானதொன்றை ஆகும். மேலே குறிப்பிட்ட முதிர்ச்சியற்ற தலைவர்களது பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ உள்வாங்காதிருப்பதும் முதிர்ச்சிமிகுந்த உலகத் தலைவர்களது பட்டியலுக்குள் லீகுவான்யு+ உள்ளீர்க்கப்படும்போது நெல்சன் மண்டேலா போன்ற ஒருவர் உள்வாங்கப்படாமையும் ஜாதிக ஹெல உறுமயவின் பொறுத்தப்பட்ட காதல் அதிகாரிவாதத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதனாலாகும். 19வது திருத்தம் தொடர்பான அவர்களது நிலைப்பாட்டோடு எமது நிலைப்பாடு கருத்துப்பூர்வமாக வேறுபடுவது அங்கு தான் ஆகும். அக்காரணம் தொடர்பாக கேட்டறிந்து கொள்வதை 19க்கு ஏற்ப உயர்நீதிமன்றம் எதிர்பார்க்காதுள்ளது.

அவ்வாறிருக்கும் போது 19வது திருத்தம் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பினால் அனாவசிய சங்கடத்துக்கு ஆளாகியுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் நிசாந்த வர்ணசிங்க 19ஐ கழுத்தில் சுமந்து சென்றவர்களது வாய் மூடப்பட்டுள்ளதாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார். 19 என உண்மையாகவே குறிப்பிடப்படுகின்ற யதார்த்த அரசியல் தர்மத்தை நாம் சுமந்து சென்று நீண்ட காலமாகின்றது. அது ஜனாதிபதியின் அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு வழங்குவதோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல. ஒட்டுமொத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் இல்லாதொழிப்பதற்கும் அனைத்து இனங்களுக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்யக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற ஜனநாயகவாதமொன்றை நோக்கியே அது விரிந்து செல்கிறது. 19 என்பது அந்த முயற்சிக்கான ஒரு ஆரம்பம் மாத்திரமே.