Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

100 நாள் மற்றும் அடுத்த பொதுத் தேர்தலின் தொப்புள்கொடி தொடர்பில் மீள சிந்தித்தல்


gamilni column-1

இதற்கு இரு வாரங்களுக்கு முன் இப் பத்தியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

‘‘100 நாள்’’ பேச்சளவிலும் எண்ணிக்கை ரீதியாகவும் எல்லை குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் மேலே குறிப்பிட்ட மக்கள் அபிலாஷையின் மகத்துவத்தை கருத்திற் கொண்டு தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்திற்கு மேலும் ஒரு காலப்பிரிவை குறித்த வேலைத்திட்டம் கருதி செலவிடுவது பற்றியும் எதிர்க்கட்சியினர் கூட எதிர்க்காமலிருப்பது பற்றியும் இந்த சந்தர்ப்பத்தில் மறந்து விடக்கூடாது.

இதனால் விகிதாசார, மாவட்ட தேர்தல் முறை மற்றும் விருப்பு வாக்கு முறையால் புறையோடியிருக்கும் ஆபத்தை அவ்வாறே வைத்துக் கொண்டு இம்முறை தேர்தலையும் அதே முறையில் அல்லது பேரம் பேசுதல், விகிதாசாரம் ஆகிய இரண்டும் கலந்த கலப்பு முறையொன்றுக்கு இந்த சந்தர்ப்பத்தில் செல்லாமலிருப்பதற்கு தடைக்கல் என்ற வாதத்தை முன் வைப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அது போலியான வாதமாகும். மக்களை ஏமாற்றுவதாகும்.

எனவே, தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி 100 நாள் முடிவில் பாராளுமன்றத்தைக் கலைத்து விட முடிவது, அந்தக் காலப்பகுதிக்குள் செல்வதாக வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றினால் மாத்திரமேயாகும். அவ்வாறின்றேல் அடுத்த வருடம் ஏப்ரல் வரையான காலப்பகுதியை பயன்படுத்தி குறித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு புதிய ஆட்சியாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த இரு வாரங்களுக்குள் அரசியல் வட்டாரத்தில் இடம்பெற்ற மாற்றங்களை நோக்கும்போது நாம் மேலே முன்வைத்த உதாரணம் மற்றும் கருத்துக்கள் தற்போதைய எதிரணியினர் உட்பட இனவாத, மதவாத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளப்போவது நாம் எதிர்பார்த்த சிறந்த சமூகம் தொடர்பான முன்னுதாரணமல்ல என்பது தற்போது சுற்றுமுற்றும் காணக்கூடியதாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் கூறியபடி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் விரும்புவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையின் மேற்புறத் தோலை அகற்றுவதற்கு மாத்திரமேயாகும். தற்போதைய நிலைமையின்படி இந்த தலைவர்கள் 1994 லிருந்து பழக்கப்பட்டிருந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையின் மந்திரத்திற்கு இன்னும் வசியப்பட்டிருப்பதாகும்.

அதற்கிடையே இனவாத, மதவாத, பிரிவினரை உயர்த்தி வைப்பதற்கு பெரும்பாலான தனியார் ஊடக நிறுவனங்கள் முன்னணியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு தமது அலைவரிசை மற்றும் அச்சுப்பதிப்பு வெளியீடுகள் ஊடாக அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கும் இடம் எந்தளவெனில், 1815 ஒப்பந்தம் அன்று ஆங்கிலேயரினால் மீறப்பட்ட சந்தர்ப்பத்தை தேடிப்பார்க்குமாறு அவர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்குக்கூட முக்கியத்துமளிப்பதற்கு தற்போது முற்பட்டுள்ளது.

நிமல் சிறிபால டி சில்வா தமது தொகுதியில் தோல்வியடைந்து வெகு நாட்கள் செல்லவில்லை. அவ்வாறிருக்கும்போது அவரது மடியில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி ஆகாயத்திலிருந்து வீழ்ந்திருக்கிறது. சிலவேளை எந்தவொரு மாற்றத்திலேனும் இருக்கின்ற நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள முடியுமாயின் மஹிந்த ராஜபக்ஷ மாதிரியான ஜனாதிபதி பதவியை ருசி பார்ப்பதற்கு தனக்கும் முடியாதென்றில்லையென அவரும் நினைக்கின்றார் போலும்.

எவ்வாறெனினும் ஏற்படக்கூடிய ஆபத்தின் நிலை தொடர்பில் அண்ணளவான தெளிவை பெற்றுக் கொள்வதற்கு அரசியல்வாதிகளிடையே நிலை கொண்டுள்ள நபர் ரீதியான மோகம் தொடர்பிலான காரணிகளை மட்டும் கவனத்திலெடுப்பது போதுமானதல்ல என்பதை நாம் அறிவோம். அதனை விட இது சிக்கலானது.

விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார போன்ற கதாபாத்திரங்கள் அமைச்சுப் பொறுப்பு அல்லது அதற்கு சமமான எலும்புத் துண்டுகளுக்கு சோரம் போகக் கூடியவர்கள். காரணம், இவர்கள் எவருக்கும் தமக்கென்ற கட்சிப் பொறிமுறையோ மக்கள் கட்டமைப்போ இல்லாமலிருப்பதாகும். இவர்களுக்கு வரப்பிரசாதம் பெறக் கூடியது மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் மாத்திரமேயாகும். மறுபுறம், நிமல் சிறிபால, சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா போன்றோர் அதனை விடவும் கூடுதலாக எதிர்பார்க்கிறார்கள். உண்மையிலே நிமல் சிறிபாலவின் வாழ்க்கையில் கூடிய காலம் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகார மோகம் காரணமாக நாசமாகிப் போயிருக்கிறது. கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக இவர்களுக்கு நேர்ந்தது மேலுமொரு அமைச்சரது கபடத்தனமான நிலைப்பாட்டுக்கு ஊக்கமளித்து அதன் மூலம் திருப்தி கொள்வதாகும்.

தற்போது வரலாறு புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதது நிகழ்ந்திருக்கிறது.

ஜே.ஆர். ஜயவர்தனவினால் 1978லிருந்து ஆரம்பமாகி படிப்படியாக மோசமாகி குடும்பஸ்தர், வெளியாருக்காக அதுவரை திறந்திருந்த சிறு சிறு ஓட்டைகளை மறைத்து 18வது அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக மஹிந்த ராஜபக்ஷ வைத்த பொறியை தற்போதைய அரசாங்கத்தின் தலைமை முழுமையாக நீக்கவுள்ளது என்பதை தெரிந்திருந்தால் நிமல் சிறிபால போன்றோர் அது தொடர்பில் மகிழ்ச்சியடைய வேண்டியதல்லாமல் அதற்கு தடையாக இருப்பது ஏன் என்ற கேள்வி எம்மிடையே வெளிப்படுகிறது. ஒறுபுறம் திட்டமிட்ட அரசியலமைப்பு திருத்தத்தினூடாக எதிர்பார்க்கின்ற தற்போதைய நிறைவேற்றதிகார ஜனாதிபதி அதிகாரத்தை நிறைவேற்று பிரதமர் அதிகாரமாக மாற்றுவதல்ல என்பது தெளிவாகிறது. நிறைவேற்றதிகார ஜனாதிபதியொருவருக்குப் பதிலாக நிறைவேற்றதிகார பிரதமர் எனும் சூத்திரம் அர்த்தமற்ற அறிமுகமாவது அதனாலாகும். உண்மையிலேயே இடம்பெறுவது, தற்போதைய ஜனாதிபதியவர்கள் கொண்டுள்ள அதிகாரங்களில் அதிகமானவற்றை பிரதமர் மற்றும் பாராளுமன்றத்துக்கு கையளிப்பதாகும். அப்போது அரசாங்கத்தின் உண்மையான அதிகார மையம் கூடிக் குறைந்தளவில் மூன்றாக இருக்க முடியும். அது ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவை மற்றும் பாராளுமன்றமாகும். அவ்வாறு மூன்று மையங்களினால் நிர்வகிக்கப்படுவதன் காரணமாக இயற்கையான சமச்சீர் நிலைக்குள்ளாவதோடு அந்த அதிகாரம் மீண்டுமொருமுறை நிறுவன கட்டமைப்பொன்றினால் கட்டுப்படுத்தப்படுகிறது. 17வது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சுயாதீன, ஆணைக்குழுக்கள் மீண்டும் கொண்டு வரப்படுவதன் நோக்கமும் அதுவேயாகும். அவ்வாறான நிர்வாக கட்டமைப்பொன்றினுள் கட்டுக்கடங்காத ராஜதந்திரங்களுக்குள்ள இடம் மட்டுப்படுத்தப்படும்.

இந்த வேலைத்திட்டம் வெற்றி பெறுமாயின் அது நாட்டுக்கு மற்றும் நாட்டு மக்களுக்கு மட்டுமேயன்றி தோல்வியடைந்த மோசமான அரசியல்வாதிகளுக்கு நன்மை பயப்பதில்லை. அவ்வாறான வேலைத்திட்டமொன்றின் வெற்றியினூடாக மேலும் மேற்கூறிய அரசியல்வாதிகள் பொது மக்களால் புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகமாகும். அதனால் தற்போதைய அரசாங்கத்தின் எண்ணிக்கை ரீதியிலான பலவீனங்களை பயன்படுத்திக் கொண்டு எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தத்தை ஏதோவொரு வழியில் தடுக்க முடியுமாயின் அதன் பிரதிபலிப்பாக ஏற்படக்கூடிய அழிவு, நெருக்கடிகள் தற்போதைய ஆட்சியாளர்களுக்குப் போன்றே எதிர்பார்க்கப்படும் மாற்றமும் தோல்வியடைந்ததாக ஆகுவதன் மூலம் மக்கள் கருத்தை மீண்டும் தம் பக்கம் திருப்பிக் கொள்வதோடு, நிறைவேற்றதிகார முறையை மீண்டும் பாதுகாத்துக் கொள்வதற்கு தமக்கு முடியுமென்பதை இக்குழுவினர் கணிப்பிட்டு வருவதாக தெரிய வருகிறது.

நாடு பாதாளத்துக்கு சென்றது 78வது அரசியலமைப்பினால் எனவும் நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் விழுந்தது 18வது திருத்தத்தின் ஊடாக என மேல்வாரியாக விளங்கிக் கொள்கின்ற போது 78ஐ வைத்துக்கொண்டு 18ஐ மாத்திரம் நீக்கி விடுவதில் திருப்தி கொள்ளாமலிருப்பதற்கான காரணம் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு இல்லை. உண்மையிலே அவரது எதிரி ஜே.ஆர். ஜயவர்தனவன்றி மஹிந்த ராஜபக்ஷவாகும்.

நிலைமை இவ்வாறெனின் 100நாள் மற்றும் அடுத்த தேர்தலுக்கிடையிலான தொடர்பு பற்றி மீள சிந்திப்பதற்கு எம்மை கட்டாயப்படுத்துகிறது. குறித்த காலத்தினுள் குழந்தை பிரசவிப்பது பொதுவான முறையாகும். எனினும் விசேடமான சந்தர்ப்பங்களில் அதாவது தாயின் அல்லது குழந்தையின் அல்லது இருவரதும் பாதுகாப்பு அந்த பொதுவான முறையினூடாக உறுதியாகாதவிடத்து வைத்தியர்கள் சிசேரியன் அறுவைக்கு உட்படுத்துகிறார்கள். அவ்வாறு அறுவை சிகிக்சை மேற்கொள்வது சோதிடத்திற்கேற்ப சுப வேளைக்கு குழந்தையை பிரசவிக்கச் செய்வதற்கெனில் நாம் அதற்கு உடந்தை இல்லை. அதாவது ஏதேனுமொரு கட்சி அல்லது குழு குறித்த காலத்துக்கு முன் தேர்தலுக்கு செல்வது தமது கட்சி சார்ந்த குறுகிய நோக்கங்களை கொண்டெனில் நாம் அதற்கும் உடந்தை இல்லை. எனினும் காலத்துக்கு முன் தேர்தலொன்றை நடத்துவதற்கு தூண்டுவது, நாட்டு நலன் தொடர்பில் அக்கறை கொண்டெனில் மீண்டும் தலை தூக்குகின்ற கட்டுக்கடங்காதவை தொடர்பில் வழியை மூடுவதற்கெனில் அதற்கெதிராவதற்கு எதுவித காரணமும் எமக்கு இல்லை. மறுபுறம், 100நாள் தொடர்பில் முழுமையான வெற்றி பற்றிய சான்றுறுதியை வேண்டி நிற்பது தமது மறைவான நோக்கங்களுக்காக தேர்தலை முடியுமானவரை காலம் தாழ்த்திக் கொள்வதற்கெனில் நாம் எந்தவித நிபந்தனையுமின்றி அதற்கு எதிராக வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவின் பழைய உருவில் மீண்டும் அவரை கொண்டு வருவதற்கு கசையடிக்கும்  இனவாத, மதவாத விமல் வீரவன்சக்கள் தொடக்கம் தற்போது பல்வேறு காரணங்களுக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாதுகாக்க வேண்டுமென கூறும் நிமல் சிறிபால டி சில்வா வரையிலான அதிகார மோகம் கொண்டவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களது பிற்போக்குவாத எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் களத்துக்கு வருகின்றன. அவர் கள் ‘கோந்துரு’ எண்ணெய் வேண்டி நிற்பது வைத்தியத்தை தோற்கடிக்கச் செய்வதற்கெனில் காலம் கடத்தாது அடுத்த தேர்தலுக்கு செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கச் செய்த முறையிலேயே இவ் அரசியல்வாதிகளையும் துடைத்தெறிய முடியும்.