Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

ஸ்ரீ.ல.சு.கட்சி பிளவுபடுகிறது


- தரிந்து உடுவரகெதர

 

கூட்டமைப்புடன் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மூலம் கொழும்பு ஹயிட் பாக் மைதானத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மஹிந்தவின் ஆதரவாளர்களினால் கிருளபனையில் ஒழுங்கு  செய்யப்பட்ட மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முடிவெடுத்ததாகவும் அந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள இருப்பதாகவும் ராவயவுக்கு தகவல் கிடைத்தது.

எங்களுடன் தொடர்பு கொண்டு கருத்துத் தெரிவித்த ஸ்ரீ.ல.சு.கவின் ஆசிரியர் சங்க செயலாளர் வசந்த ஹந்தபான்கொட கூறியதானது, முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா செயலாளர் பதவி வகிக்கும் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு மூலம் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கமும் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் என்பதாகும்.

வேறொரு மேதின கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாபா அவர்களிடம் ராவய ஏற்படுத்திக் கொண்ட நேரடி கலந்துரையாடலொன்றின்போது அவர் கூறியது, அது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும் ஸ்ரீ.ல.சு.கவின் மேதின கூட்டம் ஹயிட்பாக் மைதானத்தில் இடம்பெறும் என்றும் கூறினார்.

கிருளபனையில் நடத்தப்படவிருக்கும் கூட்டத்தின் அழைப்பாளராக அலவி மௌலானா அவர்கள் செயற்படுவதாகவும் சமசமாஜக் கட்சி, கொமியூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் சிலவும் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் என்று எங்களுடன் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.