Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

மைத்திரி அலை ஓய்ந்து விடாமலிருப்பதற்கு


maithree

- குமுது குசும் குமார

 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதானது, பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேடும் பொது மக்களின் நடவடிக்கை மூலமாகும். இந்நாட்டு மக்களுக்கு பொது வேட்பாளர்  ஒருவர் தேவைப்பட்டது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்து அவர்களுக்கிருந்த மிகப்பெரிய தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகும். மைத்திரிபால சிறிசேன முன்வருவதற்கும் முன்னர் இருந்தே பொது வேட்பாளர் யாராக இருந்தாலும் அவரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு ஆயத்தமாகியிருந்த அரசியல் வியாபாரத்தில் தலைவர் பதவிக்கு மௌன யுத்தமொன்றை நடத்தி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியதன் மூலம் இந்நாட்டு மக்கள் எங்கள் அரசியல் வரலாற்றில் மைத்திரி அலையை ஏற்படுத்தினர்.

மிகவும் துயரமான விடயம் என்னவென்றால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் வெற்றிகொண்ட இந்த மைத்திரி யுகம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நூறு நாட்கள் முடிவடைவதற்கு முன்னரே எங்கள் கையிலிருந்து நழுவிச் செல்லும் நிலைமைக்கு இன்று நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்து, பாராளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவதற்கு ஜனநாயக முறையை மீண்டும் இந்நாட்டில் நிலைநாட்டும் சட்டவாக்க மீள்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தான் தன்னை அர்ப்பணம் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அவ்வாறிருக்கும்போது, தான் தலைமைப் பதவியை வழங்கும் ஸ்ரீ.ல.சு.கவின் ஒத்துழைப்பை அது தொடர்பில் பெற்றுக்கொள்வதற்கு அவர் சாமர்த்தியம் அற்றவராக இருக்கின்றார் என்ற பயம் மக்கள் மத்தியில் உள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் ஸ்ரீ.ல.சு.கவில் இருக்கும் தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கு தொடர்ந்தும் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிப்பதற்கு தமது கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக வெளிப்படையான கிளர்ச்சியொன்றை ஏற்படுத்துவதாகும். இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வது ஜனநாயக ரீதியில் காணக்கூடியதாக இருக்கும். என்றாலும் தலைமைத்துவத்தை வழங்கிய இடதுசாரி மற்றும் தெளிவுபெற்ற வியாபாரத்தின் தேவைகள் பற்றி பொதுமக்கள் அறிவர். ஆகையால் உண்மையாக எடுத்துக் கொண்டால் ரணிலுக்குத்தான் என்று கூறிக்கொண்டு சம்பிக இந்த தாக்குதலை மேற்கொள்வது வேறொருவருக்குமன்றி ஜனாதிபதி மைத்திரிக்கேயாகும். ஏனென்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் பொது மக்களின் விருப்பத்திற்கு இம்முறை தலைமை தாங்கியது அவர் என்பதனாலாகும்.

தாம் வெற்றி கொண்ட மைத்திரி யுகத்தில் தேவையான பலனை தம்மால் பெற்றுக்கொள்ள முடியுமோ என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே மக்கள் மத்தியில் இருந்தது பற்றி பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதை ஏற்றுக்கொண்ட மக்கள் மிகுந்த கவனத்துடனும் சுபமான கொள்கையுடனும் இருந்தனர். அவர்கள் இவ்வாறு கஷ்டத்துடன் பெற்றுக் கொண்ட வெற்றியை அனுபவித்தது, மகிழ்ச்சியில் திளைத்து வீதிக்கிறங்கி மிகவும் வைபவ ரீதியாக அதனைக் கூறிக்கொண்டல்ல அது தங்களுக்குள்ளேயாகும். அதிகபட்சம் அமைதியாகவேயாகும்.  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் யோசனையை கானல் நீராக்காமல் அங்கீகரித்தால் மாத்திரமே எம்மால் மகிழ்ச்சியான வைபவங்களை நடத்தி உண்மையாகவே மகிழ்ச்சியடைய முடியும் என மக்கள் அறிவர்.

எங்களுக்கு மகிழ்ச்சியான வைபவங்களை நடத்தி உண்மையாகவே மகிழ்ச்சியடைய முடிவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் யோசனையை அங்கீகரித்தால் மாத்திரமேயாகும் என மக்கள் அறிவர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது என்ற நிலைப்பாட்டில் இந்நாட்டு மக்கள் பல தடவைகள் துன்பப்பட்டிருக்கிறார்கள். மீண்டுமொருமுறை இந்த உறுதிப்பாட்டை மீறுவது இந்நாட்டு மக்கள், விசேடமாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஜனநாயக கொள்கையில் மிகவும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். இளைய தலைமுறையினரின் இந்த தாழ்வை சமூக விரோதமாக மாற்றி அதன்மூலம் பயன்பெறுவதற்கு சந்தர்ப்பம் உருவாகலாம். அது இந்நாட்டின் எதிர்காலத்திற்கு எவ்வகையிலும் சுபமானதல்ல.