Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

மஹிந்த ராஜபக்ஷ


MAhinda-rajapaksha

- விக்டர் ஐவன்

 

சுதந்திரத்தின் பின்னர் இவ்வளவு காலமும் இலங்கையை ஆண்ட தலைவர்களுள் எதிர்காலத்தில் அதிகமாக விவாதத்திற்கு உள்ளாகும் தலைவரொருவராக இருக்கப்போவது 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவினால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவரது புகழ் தொடர்பாக பாதிப்புற்றிருக்கும் முக்கியமான காரணிகள் இரண்டில் ஒன்றாக கருதக்கூடியது, நீண்ட காலமாக இலங்கையை பீதியில் ஆழ்த்திய பயங்கரவாதமாக கருதப்பட்ட எல்.ரி.ரி.ஈ.யை தோல்வியடையச் செய்தமையாகும். இலங்கையின் பாதைகளின் வரைபடத்தை முற்றுமுழுதாக நவீனமயப்படுத்தியமை அவரின் புகழுக்கு காரணமாக இருந்த மற்றொரு முக்கிய காரணி என்றும் கூற முடியும்.

நவீன இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய துஷ்டனின் பாத்திரத்தை நடித்த பிரபாகரன் மற்றும் அந்த துஷ்டனை தோல்வியடையச் செய்த வீரனின் பாத்திரத்தை ஏற்று நடித்த மஹிந்த ஆகியோருக்கிடையே சில விடயங்களில் அற்புதமான சமநிலையொன்று இருந்தது. பிரபாகரன் வடக்கின் வல்வெட்டித்துறையின் ஒருவரெனில், மஹிந்த தெற்கின் மெதமுலன என்ற இடத்தைச்  சேர்ந்தவராவார். உத்தியோகபூர்வமாக கற்றறிந்த நிலைமையைப் பார்த்தால் இரண்டு பேரையும் கற்றறிந்தவர்களாக கருத முடியாது. இரண்டு பேரும் மீசையை முக்கியமாக கருதினர். முகத்தோற்றத்திலும் இருவருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை இருந்தது. இருவரும் தங்களை யாராலும் தோற்கடிக்க முடியாத தலைவர்களாக நினைத்தார்கள். பிரபாகரன், தான் தமிழ் மக்களின் இரட்சகர் என்று நினைக்கும்போது மஹிந்த தான் சிங்கள மக்களின் இரட்சகர் என்று நினைத்தார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் அரங்கிற்குள் வரும்போதும் அதற்காக இடம்பெற்ற முதல் போட்டியின்போதும் அவரின் வெற்றிக்காக இரண்டு நபர்கள் ஆபத்தான முறையில் பாதிப்பை ஏற்படுத்தினர். அப்போது பிரதம நீதியரசர் பதவியிலிருந்த சரத் நந்த சில்வா மற்றும் வடக்கில் அவர் மூலம் ஏற்படுத்திக் கொண்ட ராஜ்ஜியத்தின் தலைவராக செயற்பட்ட பிரபாகரன் ஆகியோராவர். அச்சந்தர்ப்பத்தில் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா மஹிந்த முன்னிலையில் இருந்த கஷ்டமான இரு தடங்கல்களை தாண்டுவதற்கு அவருக்கு உதவி செய்தார். அதில் ஒரு உதவியானது, ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் நடவடிக்கைகளை இல்லாமல் செய்தமையாகும். இரண்டாவது உதவியாக இருந்தது, மஹிந்த சிக்கியிருந்த எல்பின் அம்பாந்தோட்டை சிக்கலிலிருந்து அவரை காப்பாற்றியமையாகும். பிரபாகரனும் ஆபத்தான காரியமொன்றை செய்திருந்தார். தமிழ் மக்களுக்கு தோ;தலை புறக்கணிக்கச் செய்து ரணிலுக்கு வெற்றிபெறுவதற்கிருந்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்திருக்காவிட்டால் அந்த தேர்தலில் மஹிந்த தோல்வியடைய வாய்ப்பிருந்தது.

ஆரம்பத்தில் எல்.ரி.ரி.ஈ. தொடர்பில் எந்தவொரு கொள்கையையும் பின்பற்ற வேண்டுமா என்பது பற்றி மஹிந்தவுக்கு தெளிவான முடிவொன்று இருக்கவில்லை. எல்.ரி.ரி.ஈக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு முடிவெடுத்ததன் பின்னர் நிலையான மனவுறுதியுடன் அதற்கு தலைமை தாங்கினார். யுத்தத்தின் மூலம் எல்.ரி.ரி.ஈயை தோல்வியடையச் செய்ததன் ஊடாக பாதிப்பை ஏற்படுத்திய காரணிகளுள் பாதுகாப்புத் தரப்பினர் முன்பு இருந்ததை விட வினைத்திறமையுடனும் மனவுறுதியுடனும் யுத்தம் செய்வதற்குரிய காரணிகளுள் மேலதிகமாக எல்.ரி.ரி.ஈ. அப்போது வரலாற்று புகழ்பெற்ற வகையில் நலிவுற்று செல்லும் ஒன்றாக இருந்ததும் சாதகமாக அமைந்தது. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த வேலைத்திட்டம் எல்.ரி.ரி.ஈயினர் நீண்ட காலத்திற்கு யுத்தம் செய்யாமல் இருக்கும் நிலைக்கு தள்ளியிருந்தமையானது அவர்களின் யுத்த தொழிநுட்பத்தை பலமிழக்கச் செய்யும் காரணியாக அமைந்திருந்தது. கிழக்கின் தலைவராக செயற்பட்ட கருணா எல்.ரி.ரி.ஈ.யிலிருந்து விலகிச்  சென்றமையும் எல்.ரி.ரி.ஈ.யினரின் யுத்த தொழிநுட்பத்தை பலமிழக்க செய்யும் காரணியாக இருந்தது. அவ்வளவு காலமும் எல்.ரி.ரி.ஈ,யினருக்கு தேவையான மனித வளங்களை வழங்கும் பிரதான மத்திய நிலையமாக செயற்பட்டது வடக்கு அன்றி கிழக்காகும். கருணாவின் விலகலானது கிழக்கிலிருந்து மேலதிகமாக மனித வளங்களை பெற்றுக்கொள்ளவிருந்த இயலுமையை பலமிழக்கச் செய்தது.

முடிவில் எல்.ரி.ரி.ஈயை தோல்வியடையச் செய்து அந்த யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொண்ட வெற்றியானது மஹிந்தவை பலசாலியாக காண்பித்து மற்றைய எல்லா தலைவர்களையும் பலமற்றவர்களாக்குவதற்கு காரணமாகியது. அத்தோடு பிரபாகரனை தோல்வியடையச் செய்த வீரர் என்ற வகையில், தனக்கு விருப்பமான காலம் வரை தான் விரும்பும் வகையில் இந்த நாட்டை ஆட்சி செய்யும் உரிமை தனக்கிருக்கிறது என நினைக்கும் நிலைமையொன்று வெற்றி பெற்ற வீரரின் மனதில் உருவானது. அந்த வெற்றியை அவர் பிறர் நலன் விரும்பும் ஒரு தலைவராக தன்னை மாற்றிக்கொள்வதற்கு பதிலாக, தன்னிஸ்ட மற்றும் உயர்வு மனப்பான்மையுடன் செயற்படும் தலைவரொருவராக அவரை மாற்றியது. ஆகையால் யுத்தத்தை வெற்றி கொள்ள சாமர்த்தியம் பெற்றிருந்தாலும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சாமர்த்தியம் பெற்றிருக்கவில்லை. பூமியை ஒருநிலைப்படுத்துவதற்கு சாமர்த்தியம் பெற்றிருந்தாலும் இனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு சாமர்த்தியம் பெற்றிருக்கவில்லை. அவர் பயங்கரவாதிகளை புரிந்து கொண்டு பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்வதற்கு சாமர்த்தியம் பெற்றிருந்தாலும் பயங்கரவாதம் உருவாவதற்கு காரணமாகவிருந்த சமூக பொருளாதார காரணிகளை புரிந்து கொள்வதற்கு சாமர்த்தியம் பெற்றிருக்கவில்லை. இறுதி பகுத்தாய்வின்போது தான் தோல்வியடையச் செய்தது, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையொன்றையன்றி பேய் பிடித்து ஆடும் நிலைமையிலிருக்கும் நமது நாட்டு இளைஞர்களே என்பதை புரிந்து கொள்வதற்கும் சாமர்த்தியம் பெற்றிருக்கவில்லை. யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தமிழ் மக்களுக்கு அவர்கள் இழந்திருந்த கௌரவம் மற்றும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களை யுத்தத்தில் தோல்வியுற்ற மக்கள் என்ற நிலைக்குள்ளாக்கினார்.

அவரால் புரிந்து கொள்ள முடியாது போன அடுத்த முக்கியமான காரணியாவது, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் நீண்ட காலமாக ஒழுக்கமற்ற சுற்றுச் சூழலில் இருப்பதற்கு இருந்த நிலைமையில், இந்த நாட்டு சமூக முறையை மாத்திரமன்றி, அரசியல் முறையையும் அதனோடு இருந்த நிறுவன முறையையும் மேலும் முன்னோக்கி நடத்திச் செல்வதற்கு முடியாத வகையில் குப்பையாக இருந்தமையாகும். அவர் அந்த நிலைமையிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு காரணமான மீள்திருத்த வேலைத்திட்டத்தை செய்வதற்கு பதிலாக அந்த குப்பையாகியிருந்த சமூக அரசியல் முறையை தோல்மேல் இருத்திக் கொண்டு முன்னுக்குச் செல்ல முயற்சித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த இந்தத் தலைவர், இரு முறை ஆட்சிக்காலம் தொடர்பில் நடைமுறைப்படுத்தியிருந்த வரம்புகளை அகற்றி விட்டு இருமுறை ஆட்சிக்காலத்தின் பின்னரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலைமைக்கு அந்த முறையை மாற்றினார். தான் விரும்பிய காலம் வரை பதவியில் இருப்பதே அவரது அபிலாஷையாகும்.

இவ்வாறு பிரபாகரனை தோல்வியடையச் செய்த வீரர், தனக்குள்ளே பிரபாகரனின் சில கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்ட நிலைமைக்குள்ளாகினார் என்றும் கூற முடியும். 1978ம் ஆண்டிலிருந்து ஆட்சிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களும் குறைந்த பட்சம் அல்லது கூடிய பட்சம் ஊழல் ஆட்சியாளர்களாக இருந்தார்கள் என்று கூறினாலும் அந்த சகல ஆட்சியாளர்கள் மத்தியிலும் மஹிந்த ராஜபக்ஷ மிகக்கூடிய ஊழல் ஆட்சியாளர் என்று கருத முடியும். 1978ன் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா குழுக்களும் பொது மக்களின் சொத்தை கொள்ளையடித்தன. பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதில் மற்றைய சகலரையும் விட மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இருந்தார். 1978ன் பின்னர் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் மிகக் கூடுதலான அதிகாரத்தை அனுபவித்து, ஆட்சிக்காலத்தில் மிக அதிகமான பேராசையை வெளிப்படுத்திய, அதிகமாக சுயநலவாதியாகிய, சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காத, உறவினர்களுக்கு அதிகளவான ஆதரவு வழங்கி செயற்பட்ட, போக்கிரி மற்றும் நாடோடி தன்மைக்கு அதிகமாக இடம்கொடுத்து செயற்பட்ட தேவையற்ற விடயங்களில் அதிகமான நம்பிக்கை கொண்டு செயற்பட்ட, இன பிரிவினைவாதத்தை அதிகமாக ஏற்றுக் கொண்ட, வீன் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்று கருத முடியும்.

ஆளுநர் எட்வட் பான்ஸுக்கு பின்னர், இலங்கையில் போக்குவரத்து வரைபடத்தில் மிகப்பெரிய திருப்பமொன்றை ஏற்படுத்திய ஆட்சியாளராகவும் அவரை கருத முடியும். ஆளுநர் பான்ஸுக்கு இலங்கை சம்பந்தமாக மிகப்பெரிய கனவாக இருந்தது வீதிகளாகும். அவர் கூறியது, இலங்கைக்கு முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் அவசியமாக இருப்பது வீதிகள் என்றாகும். இறுதியில் மிகப்பெரிய பாதைகளாக கருதக்கூடிய எதுவுமே இல்லாத ஒரு நாடொன்றை அவர் வீதிகளினூடாக மிக அழகாக ஒன்றிணைக்கும் நாடொன்றாக மாற்றினார். மஹிந்தவின் வீதி அபிவிருத்தி திட்டத்தில் ஊழல் கொள்கை இருந்தாலும் அவை நாட்டின் எதிர்கால வெற்றிக்கு செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணியாக செயற்படுவதை தடுக்க முடியாது.

மஹிந்தவின் வீதிகள் மற்றும் ஆதாரக் கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் நாட்டின் இடையறாத பொருளாதார அபிவிருத்தி இருக்கின்றதென்பதை காட்டும் முகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடவடிக்கையொன்றைப் போன்றே மிகப் பெரியளவில் தவறான முறையில் சொத்து சேர்த்துக் கொள்வதற்காக கொண்டு சென்ற நடவடிக்கையொன்றெனவும் கூற முடியும். ஆதாரக் கட்டமைப்பு முதலீடானது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இல. 1 ஆக நியமிக்கப்பட்டிருந்தது. அவர் இந்த களம் தொடர்பில் எல்லா வருடத்திலும் அதற்கு முன்னைய வருடத்தை விட மிகப்பெரிய முதலீட்டை செய்யும் அதேவேளை, அந்த நிலைமையை இடையறாது நடத்திச் சென்றார். ஆகையால் அந்த ஆட்சிக்காலத்தில் அது மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டுவதற்கும் காரணமாகியது. இந்த களம் தொடர்பில் மிகப் பெரியளவில் செய்யப்படும் முதலீட்டிற்காக தேவைப்படும் சொத்தை பெற்றுக் கொண்டது வாணிப கடன் என்ற முறையில் சீனாவிடமிருந்தாகும். இலங்கையில் செயற்படுத்தப்படும் தந்திரோபாயத்தின் முக்கியமான மற்றும் அதன் மூலம் தான் பெற்றுக்கொள்ளக்கூடிய இலாபத்தை கருத்திற் கொண்டு இலங்கை சீனாவிற்கு விசுவாசமுள்ள நிலைமையில் வைத்துக் கொள்வதற்காக சீனாவும் தாராள குணமுள்ள வகையில் இலங்கைக்கு மிகப்பெரியளவில் கடன் பெற்றுக் கொடுக்கும் கொள்கையொன்றை கொண்டு சென்றார். ஆகையால் நாட்டின் ஆதாரக் கட்டமைப்பு அபிவிருத்திக்காக மிகப்பெரியளவில் தேவையான முதலீட்டுச் செலவை தேடிக் கொள்வது இலேசான காரியமாக இருந்தது. இந்த முதலீட்டின் அளவு மிகப்பெரியளவு என்பதனாலும் அதற்காக செய்யப்படும் செலவுகளின் தன்மையும் சிக்கலாகியதனாலும் தவறான முறையில் உழைத்த பங்கின் அளவு மிகவும் கூடியளவானது என்றும் கூற முடியும். இந்த விடயத்தில் நிபுணரொருவராக கருதக்கூடிய கலாநிதி அமல் எஸ். குமாரகேயின் கணிப்பீட்டின்படி சுரண்டி எடுக்கப்பட்டிருக்கும் பங்கின் அளவு முழு முதலீட்டு தொகையில் பாதி போன்று மிகப் பெரிய தொகையாகும். அந்த அர்த்தத்தில் மஹிந்த மற்றைய ஆட்சியாளர்களை விட வித்தியாசமாக நாட்டின் பொதுச் சொத்தை சுருட்டியிருப்பதானது ஆதாரக் கட்டமைப்பு என்ற முறையில் போன்றே, நாட்டின் பொருளாதார அபிவிருத்தியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டும் வேலைத்திட்டமொன்றிற்கு மறைவிலாகும்.

மஹிந்த பதவி ஏற்கும் போது அவர் பிறந்த ஊரான அம்பாந்தோட்டை மாவட்டம் நாட்டிலிருந்த ஏழை மற்றும் அபிவிருத்தியடையாத மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. அவர் அம்பாந்தோட்டைக்கு கம்பீர தோற்றமொன்றை பெற்றுக் கொடுப்பதற்காக நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்கள் போன்றே அவற்றிற்காக செலவிட்ட தொகையும் மிகப் பெரியளவாகும். என்றாலும் அவற்றில் அதிகமானவை பொருளாதார முறையில் பயனற்றதானது அன்றி அந்த மாவட்டத்தின் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு காரணமான நடைமுறையல்ல. சர்வதேச கிரிக்கட் மைதானமொன்றை அமைத்திருந்தாலும் அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றது ஒரு சில சந்தர்ப்பங்களிலேயாகும். அங்கு அமைக்கப்பட்ட துறைமுகம் இருந்திருந்து கப்பல்கள் வருகின்ற, நட்டத்தில் நடத்திச்செல்லும் துறைமுகமானபோதிலும் மத்தளயில் உருவாக்கிய சர்வதேச விமான நிலையமும் விமானங்கள் வராத விமான நிலையமாகியது. இறுதி பகுத்தாய்வின்போது அவர் அம்பாந்தோட்டைக்கு பெற்றுக் கொடுத்தது அதன் முன்னேற்றத்திற்கு அவசியமானவற்றிற்கு பதிலாக அபிவிருத்திக்கு செல்வாக்கு செலுத்தாத பெறுமதியற்ற விடயங்களாகும். பிரபாகரன் போன்றே தன்னை தோற்கடிக்க முடியாத ஒருவராக மஹிந்த நினைத்தார். அவர் அவசரமான ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்தியதும் தான் மேலும் இரண்டு வருடங்கள் பதவியில் இருக்கும் நிலைமையில் தன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது என்ற குருட்டு நம்பிக்கையினாலாகும். அவரின் காலத்தில் போன்று மூட நம்பிக்கைகள் ஆட்சி செய்த காலமொன்று எதுவுமில்லை. அவர் மூட நம்பிக்கைகளை பிரபல்யப்படுத்துவதற்கு இயன்றளவு அனுமதி வழங்கினார். அவரின் ஆட்சிக்காலத்தில் கௌரவமான நபர்களாக கருதப்பட்டது கள்ள வியாபாரிகள், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள், பெயர்போன பாவச் செயல்கள் புரிந்தவர்கள் உட்பட ஜாதகக்கார்கள் மற்றும் சூனியக்காரர்களாவர். அவர் போன்று தன்னுடைய பிள்ளைகளுக்கு இஸ்டம் போல் ஆடுவதற்கு இடமளித்து அதன் மூலம் திருப்திபடும் வேறு ஒரு தலைவர் இருக்கவில்லை. அவரின் தோல்வியின் மூலம் அவரின் போக்கிரிதனமான அரசியல் முறை போன்றே அவரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர்களும் பாதிப்புற்றனர். அவரை 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களின் மூலம் அவரை தோல்வியுறச் செய்திருக்காவிட்டால் அவரின் ஆட்சி மாற்ற முடியாத அநியாயக்காரர்களின் ராஜ்ஜியமாக உருவாவதற்கு இடமிருந்தது. அவரின் ஆட்சிக் காலத்தில் போன்று சர்வதேச ரீதியாக இலங்கையில் கொள்கைகள் களங்கப்படுத்தப்பட்ட காலம் ஒரு போதும் இருக்கவில்லை.

அவரின் தோல்வி தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்திய முக்கியமான காரணி தங்களுடைய தோற்கடிக்கப்படாத நிலைமை பற்றி அவருள் இருந்த அகற்ற முடியாத நம்பிக்கையாகும். தோல்வியை ஏற்படுத்திய விதம் வலுக்கட்டாய நடவடிக்கைக்கு தள்ளி விடுவது தடுக்கப்பட்டது என்றும் கூறலாம். தோல்வியடையப் போகிறோம் என்று தெரிந்திருந்தால் அவரால் ஏற்படவிருந்த விளைவுகள் இதனை விட மோசமாக இருந்திருக்கும். அவருக்கு திரும்பவும் பதவிக்கு வருவதற்கான தேவை இருந்தபோதிலும் இன்னும் கொஞ்ச காலம் செல்லும் வரை குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு அன்றி மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு அவருக்கு எந்தவித தகுதியும் இல்லை.

யுத்தத்தின் மூலம் கிடைத்த வெற்றியினால் தலைக்கனத்துடன் செயற்படாமல் யுத்தத்தின் பின்னர் இருக்கும் மிகப்பெரிய நெருக்கடியை புரிந்து கொண்டு செயற்படும் தன்மை அவருக்கு இருந்திருந்தால் யுத்தத்தின் மூலம் ஒருநிலைப்பட்ட பூமிக்கு ஒருநிலைப்பட்ட இனமொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முயற்சித்திருப்பாராயின், அதற்கு தேவையான மீள்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சித்திருந்தாராயின் மஹிந்தவின் பெயர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பது இலங்கையை வெற்றி கொண்ட வீரர் என்ற வகையிலாகும். என்றாலும் அதற்குப் பதிலாக தற்போது அவரின் பெயர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பது சுயநலமான துர்நடத்தையுள்ள ஆட்சியாளர் என்றாகும்.