Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

பத்தொன்பதே இறுதி முடிவு


ravaya editorial logo

19வது அரசியலமைப்பு சட்டவாக்க திருத்தச்சட்டமூலம் ஊடாக கடந்த ஜனவரி 8ம் திகதி இலங்கையில் ஜனநாயக ரீதியிலான மாற்றமொன்றை எதிர்பார்த்த பொது மக்களின் தேவை முழுமையாக நிவர்த்தியடையாது. அந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முழுமையாக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் கேட்டுக் கொண்டது, முற்று முழுதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்து பாராளுமன்ற முறைக்குச் செல்ல வேண்டும் என்பதாகும். என்றாலும் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாமலாக்கப்படாது. ஒரு பக்கம் பார்த்தால், அது மாற்றமொன்றிற்காக வாக்குகளை அளித்த பொது மக்களின் எதிர்பார்ப்பை மீறும் செயலாகும்.

என்றாலும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட 19வது திருத்தச்சட்டமூலம் 1978 அரசியலமைப்பு சட்டவாக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருத்தச்சட்டமூலம் என குறிப்பிட முடியும். ஜனாதிபதியின் எதேச்சதிகார அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்காக தகுதிகாண் ஆட்சிக்காலத்தில் 2001 ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சர் தவிர்த்து மற்றைய சகல அமைச்சர்களினதும் ஏகமனதான சம்மதத்துடன் முடிவாக்கப்பட்ட ஜனநாயக முறைக்கு சார்பான 17வது திருத்தச்சட்டமூலத்தை தொடர்ந்து செல்லும் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் இல்லாமற் செய்வதன் மூலம் ஏற்படும் அரசாட்சி முறைக்கும் இடையில் கடந்து செல்லும் சந்தர்ப்பமொன்றை பிரதிநிதித்துவம் செய்யும்.

18வது ஆட்சிமுறை சட்டவாக்க திருத்தச்சட்டமூலம் முற்றுமுழுதாக இல்லாமல் செய்யப்படும். 18வது திருத்தச் சட்டமூலமானது இலங்கையில் தொடர்ந்து செய்யப்பட்ட கர்வமான  ஆட்சிமுறை சட்டவாக்க திருத்தச்சட்டமாகும். 1978 சட்டவாக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சர்வாதிகார தன்மையுடன் ஜனாதிபதி பதவியை அதிலுள்ள சகல சுயவிருப்ப குணவியல்புகளை அதிக வளர்ச்சியடையச் செய்து, எல்லையற்ற சர்வாதிகார தன்மையை நோக்கி தள்ளி விடப்பட்டது 18 திருத்தச்சட்ட மூலமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனி நபர் பதவி ஆசையை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே உருவாக்கப்பட்ட அந்த திருத்தச்சட்டமூலம் பற்றி விவாதிப்பதற்கு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு பொது மக்களுக்கு மட்டுமன்றி அரசாங்க அமைச்சர்களுக்கும் சந்தர்ப்பமொன்று கிடைக்கவில்லை. அப்பம் சுடுவது போன்று அரசாங்க முறை சட்டவாக்கம் திருத்திமையக்கப்பட கூடாது என கூறும் அரசியல்வாதிகள் கூட 18க்கு பாராளுமன்றத்தின் போது கையைத் தூக்கியது அதில் என்ன இருக்கின்றது என்பது பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமலாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலம் பற்றி இருந்த பயத்தினாலாகும். 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அந்த கீழ்த்தரமான திருத்தச்சட்டமூலத்தை குப்பைக் கூடைக்குள் போடக்கிடைத்தமையானது நாட்டிற்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகும்.

ஜனாதிபதி பதவியிலிருக்கும் அதிகாரங்களை குறைப்பதும், அந்த அதிகாரங்களை பிரதமருடன் பகிர்ந்து கொள்வதும் நாட்டின் ஆட்சி அதிகாரங்களை அமைச்சர்களுக்கு வழங்குவதும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுரைக்கேற்ப நடந்து கொள்ளும் ஒருவரை நியமித்தலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு இருக்கும் உரிமையை முதன்மை உரிமையாக ஏற்றுக் கொள்வதும் ஆட்சிமுறை சட்டவாக்க குழுவை மீண்டும் நியமித்து சுயாதீன கொமிஷன் சபைக்கு மற்றும் சுயாதீன பதவிகளுக்கு நபர்களை நியமிக்கும்போது முன்னிற்கும் அதிகாரத்தை ஆட்சிமுறை சட்டவாக்க சபைக்கு வழங்குவதும், புதிய சுயாதீன கொமிஷன் சபையை உள்ளடக்குவதும், 19ன் மூலம் குறித்த மீள்திருத்தம் போன்ற இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை ஜனநாயக முறையில் முன்னே கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த அர்த்தத்தில் இந்த சட்டவாக்க திருத்தச்சட்டமூலத்திற்கு எதிh;ப்பு தொpவிப்பது என்பது நாட்டின் எதிர்கால ஜனநாயக மீள்திருத்தங்களுக்கு எதிராக செல்வதாகும். அவ்வாறு எதிர்ப்பவர்கள் செய்வது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கை முறையை மேலும் மாற்றமடையாமல் கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும். மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் அரசாங்கமும் இருந்தது, முற்று முழுதாக ஜனநாயக எதிர்ப்பு நிலைமையிலாகும். தன்னை தன்னாலேயே அரசரொருவரின் நிலைமைக்கு நியமித்துக் கொள்ளும் மனோநிலையில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொடுப்பதை தெரிந்து கொண்டே எதிர்த்தார். 17வது திருத்தச்சட்டமூலத்தை பலமற்றதாக்குவதற்கும் 18ஐ சட்டமாக்குவது, தகவல்களை அறிந்து கொள்ளும் வரைபை பாராளுமன்றத்தில் தோல்வியடையச் செய்வதற்கு காண்பிக்கக்கூடிய உதாரணங்கள் சில மட்டுமேயாகும். திரும்பவும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு வெளிப்படையாக முயற்சிக்கும் தரப்பினரையும் அறிமுகப்படுத்த வேண்டியது மீள்திருத்த மற்றும் ஜனநாயக விரோத முகாமில் தற்காலிகமாக பயணிப்போர் போன்றாகும்.

19 என்பது ராஜபக்ஷ முறைமைக்கு எதிராக ஜனநாயகத்தை குறிப்பிடுவதாகும். ஆகையால் அந்த திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டியது, ராஜபக்ஷ காலத்தில் மக்கள் அடிமைகள் போன்று நடத்தப்பட்ட முறையை எதிர்காலத்திலும் கொண்டு செல்வதற்கு முயற்சிப்பவர்கள் போன்றாகும்.

அவ்வாறான கட்சி அல்லது அதிகார அமைப்புக்கள் அல்லது நபர்கள் நாட்டின், வரலாற்றில் இருக்க வேண்டியது எந்த இடத்தில் என முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் நாட்டு மக்களுக்கே இருக்கிறது.