Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

தேர்தல் முறைக்கு வட்டமேசை


ravaya editorial logo

ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கேற்ப, விருப்பு வாக்கு தேர்தல் முறையை முற்றாக இல்லாமல் செய்து, சகல தேர்தல் மாவட்டங்களிலும் அமைச்சரொருவர் கிடைக்கும் வகையில் அமைச்சர் ஆசன முறையையும் விகிதாசார முறை கூட்டோடு புதிய தேர்தல் முறையொன்றுக்காக கருத்துக்களை முன்வைப்பது தொடர்பில் சர்வ கட்சி குழுவொன்றை நியமிப்பதற்கு, குறிக்கப்பட்டிருந்தது கடந்த ஜனவரி 28ம் திகதியாகும். மார்ச் 2ம் திகதி புதிய தேர்தல் முறை பற்றி குழு யோசனையைப் பெற்றுக்கொண்டு அதற்கேற்ப குறித்த சட்டதிட்டங்களை ஒழுங்குபடுத்தலை செய்வதாக உறுதியொன்றும் அந்த வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு காரியங்களும் திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படவில்லை. 100 நாள் திட்டத்தில் இன்னும் ஐம்பது நாட்களுக்கு கிட்டிய காலம் மிகுதியாக இருப்பதனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை சம்பந்தமாக துயரத்திற்குள்ளாகும் அளவிற்கு சந்தர்ப்பம் இல்லாதபோதிலும் வேறு பிரச்சினைகள் அதன் மூலம் உருவாகும்.

அதாவது, தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பில் போதுமானளவு அவதானமொன்றையும் அழுத்தத்தையும் மற்றும் அர்ப்பணிப்பையும் அரசாங்கம் காட்டாமையாகும். தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பில் சட்டதிட்டங்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவது எவ்வாறாயினும் எங்களால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்த தேர்தல் மாதிரி என்ன என்பது பற்றியாவது விஞ்ஞான ரீதியான பேச்சுவார்த்தையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் இன்னும் திறமை பெறவில்லை. அந்தந்த அரசியல் கட்சிகளும் வெவ்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள் அதுபற்றி கூறும் கருத்துக்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலும் பிரசித்தி பெறும். என்றாலும் ஒன்று திரட்டிய வகையில்  தேர்தல் முறை சம்பந்தமாக ஆழமான மத்திய உரையாடலொன்று இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அது வெட்கப்படவேண்டிய ஒரு நிலைமையாகும்.

அரசியல் கட்சிகள் தேர்தல் முறையை பார்ப்பது தங்களுடைய அரசியல் தேவைக்காகவே என்பது ரகசியமல்ல. பெரிய கட்சிகள் ஒன்றுக்கொன்று தனி தேர்தல் மாவட்ட முறை பற்றி அதிக விருப்பம் தெரிவிப்பதோடு, சிறிய கட்சிகள் அதிக விருப்பம் தெரிவிப்பது விகிதாசார முறைக்காகும். இனஞ்சார்ந்த அடையாளத்துடன்கூடிய கட்சிகள் தங்களுடைய மத்திய ஆட்சியிலிருந்து அதிக இலாபமொன்றை பெற்றுக் கொள்வது எந்த முறையினூடாக என்பது பற்றி தேடிப் பார்க்கக்கூடும். இந்த இரு முறைகளினதும் கலவை ஒன்றை பற்றி பேசும்போது அடுத்த பிரச்சினை உருவாவது கலவையில் இலகுவான விகிதாசார பெரும்பான்மை  விகிதம் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது பற்றியாகும். அது பற்றியும் வாத விவாதங்கள் உள்ளன. அவ்வாறான வாத விவாதங்கள் இருக்க வேண்டும்.

என்றாலும் பிரச்சினையாவது அரசியல் வாத விவாதங்களுக்கு அப்பால் சென்ற விஞ்ஞான ரீதியான பகுத்தாய்விற்கு முன்வருவதற்கான பாங்கொன்று இன்னும் இந்த பிரசித்தியான தளத்தின் ஒப்பந்தத்திற்குள்ளே இல்லாமையாகும். தேர்தல் முறை பற்றி தேடிப் பார்க்கும்போது எண்ணிக்கை மற்றும் விகிதாசாரத்திற்கு கிடைப்பது முக்கியமான ஒரு இடமாகும். குறிப்பிடப்பட்ட சகல தேர்தல் முறையையும் புள்ளிவிபரவியல் மற்றும் விகிதாசாரத்தினூடாக எண்ணி விஞ்ஞான ரீதியான முடிவொன்றை பெற முடியும். அது அந்தந்த முறையில் உண்மையான நடைமுறையை காட்டும் காட்சியாக மாறும். ஆகையால் எங்களுடைய முதல் அவதானம் செல்ல வேண்டியது, குறிக்கப்பட்ட முறைகள் இலங்கையில் தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு புள்ளிவிபர கோவைகளிலிட்டு விஞ்ஞான ரீதியான அவதானிப்பை பெற்றுகொள்வதற்கு என்பது தெரியும். அந்த விஞ்ஞான ரீதியான பகுத்தாய்வின் பின்னர் அரசியல் தேவைகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே திருப்தி படக்கூடிய முறையொன்றை தேடிப்பார்க்க முடியுமாக இருக்கும்.

தற்போது இடம்பெறுவது வரையறுக்கப்பட்ட பெயரையுடைய தரவுகள் கூட அந்தந்த அரசியல்வாதிகளின், கட்சிகளின் தேவைக்கேற்ப சிலவேளைகளில் உருத்திரிபு முறையில் மேற்கோள்காட்டுவதாகும். இல்லையென்றால் அர்த்தம் காண்பித்தலாகும். இல்லையென்றால் சரியான முறையில் கூறுவதாகும்.

இதனால், தேல்தல் முறை சம்பந்தமாக விஞ்ஞான ரீதியான தரவுகளினடிப்படையில் முதலில் பகுத்தாய்வு செய்து கொள்வதற்கு வட்டமேசையொன்றுடனான ஒழுங்குமுறையான சான்றாண்மையுடைய குழுவொன்று அவசியமாகும். அந்த வட்ட மேசைக்கு முதலில் அது பற்றி தற்போது செயற்படுத்தி, தரவுகளை திரட்டிக்கொண்டு, அந்த தரவுகள் பற்றி பகுத்தாய்வொன்று இருக்கும் சான்றாண்மையுடைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியும். அப்படியே அவ்வாறான சாமர்த்தியம் மற்றும் அர்ப்பணம் ஒன்றை காட்டும் குடிமக்களுக்கும் சிவில் குழுக்களுக்கும் அது சம்பந்தமாக அழைப்பு விடுக்க முடியும். அவர்களுக்காக ஒழுங்குபடுத்தி அந்தந்த முறைகளுடன் பகுத்தாய்வு பேச்சுவார்த்தையின் பின்னர் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க முடியும். அந்தந்த கட்சிகளில் அரசியல் தேவைகள் இருக்கும் முறைகளினுள்ளே சாதனை செய்வது எவ்வாறு என்பது பற்றி கலந்துரையாடி கேள்வி கேட்டலை அதன் பின்னர் ஆரம்பிக்க முடியும். குறுகிய கால அட்டவணைப்படி, கூடிய அர்ப்பணத்துடன் காரியங்களைச்  செய்தால் ஆகக் குறைந்த அளவு எங்களுக்கு பொருத்தமான முறை பற்றி விஞ்ஞான ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக நிலையான தன்மைக்கு வருதல் கடினமானதல்ல.

அவ்வாறில்லாமல் தேர்தல் முறை பற்றி கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் தீர்மானம் எடுப்பதற்கும் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் ஒப்படைத்தால் ஏற்படுவது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். எங்களுடைய அரசியல்வாதிகள் அதிகமானோருக்கு கணக்கு முடியாமையினால், நூறு நாள் வேலைத்திட்டம் தன்னுடைய பெயரில் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் உடனடியாக தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கு விஞ்ஞான ரீதியான பேச்சுவார்த்தையொன்றை ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டியது ஜனாதிபதியே ஆவார்.