Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

தவறவிட்டது எங்கே?


victor

- விக்டர்ஐவன்

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தன்னிஷ்ட, ஊழல்மிக்க, தொல்லைப்படுத்தும் மற்றும் பிரிவினைவாத ஆட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பொது மக்களுக்கு புதிதாக எதையும் தராவிட்டாலும் ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடிப்பதற்கு, அரசியல் நிறைவேற்றத்துக்கு கிடைக்கும் வரலாற்று சிறப்புமிக்க முக்கியத்துவம் இல்லாமல் போகாது. அது எதிர்பாராத முறையில் கிடைக்கப்பெற்ற ஒரு முக்கியத்துவமான வெற்றியாக இருப்பது துர்நடத்தையுள்ள நோக்கோடு பயணம் செய்து கொண்டிருந்த நாட்டின் பயணத்தை நன்னடத்தையுள்ள பயணத்திற்கு தள்ளியதனாலாகும். அதனை வந்த வழியிலேயே திரும்பவும் திரும்புவதற்கு முடியாத வரலாற்று சாதனையாகவும் கருத முடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருந்தால், ஏற்படவிருந்த தீய விடயங்களோடு மிகப்பெரிய தீய விடயமாக கருதக்கூடியதாக இருந்தது, அமெரிக்காவை முதன்மையாகக் கொண்டு மேற்கத்திய நாடுகள் தனித் தனியாகவோ கூட்டுச்சேர்ந்தோ இலங்கைக்கு தடையாணை ஏற்படுத்தும் நிலைமையை ஏற்படுத்துவதாகும். அது அவ்வாறு இடம்பெற்றிருந்தால் இலங்கை வெற்றி கொள்ள முடியாத துரதிர்ஷ்ட நிலைமைக்கு தள்ளப்படுவதற்கு இடமிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அது பற்றி அறிந்திருந்தார். அவர் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு வந்ததும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தன்னுடைய அரசியல் ஆதிபத்தியத்தை உறுதி செய்து கொள்வது அவசியமானது என்று நினைத்ததனாலாகும். அந்த அர்த்தத்தில் ஜனாதிபதித் தேர்தலொன்றுக்காக ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அரசியல் ஆசையை நாட்டு மக்களின் அதிர்ஷ்டத்துக்கு கிடைத்த ஆசையாக கருத முடியும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்ததனால் இலங்கை மக்களுக்கு கிடைத்த முக்கியமான வரப்பிரசாதமாக கருதக்கூடியது சர்வதேச தடையாணை ஏற்படுத்தும் நிலைமையிலிருந்து இலங்கை விடுதலை பெற்றமையாகும்.

ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் பெரிய சித்திரம் வர்ணமயமானது. என்றாலும் அதற்கு மாற்றமாக சிறிய சித்திரம் குழப்பமானதாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது ஆட்சி சம்பந்தமாக உரிய மதிப்பீடு இல்லாமை அவருடைய தோல்விக்கு பாதிப்பு ஏற்படுத்திய ஒரு முக்கியமான நிகழ்வொன்றென்று கூற முடியும். அதுவே தற்போது வெற்றிகரமான ஒருவர்பின் ஒருவராக அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தில் குழப்பமேற்படுத்துவதற்கு காரணமாக இருக்கும் பிரதான காரணியாக உள்ளது.

பலசாலியை தோற்கடிப்பதற்கு கனவு காணுதல்

யுத்த ரீதியாக எல்.ரீ.ரீ.ஈயை தோற்கடிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பலசாலியான நிலைக்கு மாற்றி மற்றைய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை குட்டி மனிதர்கள் என்ற நிலைக்கு மாற்றுவதற்கு காரணமாக இருந்தது. அதனோடு பலசாலிக்கு இருக்கவேண்டிய தற்பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருந்தது. பலசாலியொருவருக்கு முன்னிலையில் குட்டி மனிதர்களுக்கு இருக்கும் கனவு மற்றைய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இருந்தது. இந்த இரண்டு கட்சிகளுக்குமிடையே இருந்த மிகப்பெரிய இடைவெளியினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சரி பிழை எவ்வாறெனினும் அவர்எதிர்க்கட்சி குட்டிமனித தலைவர்களுக்கு தோற்கடிக்க முடியாத வெல்ல முடியாத தலைவராக கருதப்படும் நிலைமையொன்று மக்கள் மத்தியில் இருந்தது.

அரசியல் சமூகத்தை மறைத்துக்கொண்டு இடம்பெற்ற அந்த கனவுக்கு எதிராக முன்னோக்கி பார்க்கும்போது மிகவும் அழகான அரசியல் சூத்திரமொன்றை முன்வைக்கும் சமூக செயற்பாடொன்று எதிர்காலத்தில் உண்டாகும். அது மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சாதாரண சமூகமொன்றுக்கான நடவடிக்கையாகும். அந்த செயற்பாடு கூறியதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி முறையை தோற்கடிக்கச் செய்வதற்காக மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிடும் அரசியல் தலைவருக்கு பதிலாக பொது மக்களின் வரவேற்புக்கு உள்ளாகும் சுயாதீன நபரொருவரை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதாகும். ஹிந்தவுக்கு எதிரான சகல அரசியல் கட்சிகளும் அந்த பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதாகும். பொது வேட்பாளரின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டியது வரையறுக்கப்பட்ட சட்டவாக்கம் மீள்திருத்தம் ஊடாக ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்பட்டு 17வது திருத்துச்சட்ட மூலம் திரும்பவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகும். அதன் மூலம் 17வது திருத்தச்சட்ட மூலத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுயாதீன கொமிஷன் சபை முறை மறுபடியும் உயிரூட்டப்படுவதாகும். இந்த வரையறுக்கப்பட்ட குறிக்கோளுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டவாக்க திருத்த வரைபும் இந்த வியாபாரத்திற்கு இருந்தது. அந்த வரைபில் சட்ட வரைஞராக செயற்பட்டிருந்தது தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டவாக்க தொகுப்பு முறையில் பிரதான ஆலோசகராக செயலாற்றும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆவார்.

வரையறுக்கப்பட்ட மீளாய்வு வேலைத்திட்டத்தின் வரையறை

ஜனாதிபதி முறைக்கு எதிராக பொதுமக்களுக்கு கருத்தொன்று ஏற்படும்போது மாதுலுவாவே சோபித தேரரும் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் செயலாற்றும் சாதாரண சமூகத்திற்காக இடம்பெறும் திட்டத்தை செயற்படுத்தியிருக்கும் செயற்பாடுகள் பற்றி என்னுற் மிகப்பெரிய மதிப்பொன்று  இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்து அரசியல் முறையில் மாற்றமொன்றை ஏற்படுத்தியமைக்காக அந்த நிகழ்வை முன்வைத்த சூத்திரம் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய விமர்சினத்திற்கு காரணமாகியது. அது பற்றி எழுதும் விமர்சனம் என்ற தலைப்பின் கீழ் புத்தகமொன்றும் பிரசுரிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பமான நிலைமையை நன்றாக புரிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் இருப்பதால் அது பற்றி நான் வெளிப்படுத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகும் முதன்மையான தர்க்கம் மறுபடியும் கவனித்துப் பார்க்க கூடிய குழப்பமான நிலைமையை புரிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

  1. அந்த செயற்பாட்டை முன்வைக்கும் வரையறுக்கப்பட்ட மீள்திருத்த வேலைத்திட்டத்திற்கு தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பான கேள்வி உள்ளடங்கவில்லை. ஊழல்மிக்க தன்னிஸ்ட துர்நடத்தையுள்ள ஆட்சிமுறையொன்று ஏற்பட்டது தொடர்பில் ஜனாதிபதி முறை மேலதிக காரணியாக தாக்கமேற்படுத்தியிருந்தாலும் அவ்வாறான நிலைமையொன்றை ஏற்படுத்தியது தொடர்பில் பிரதான காரணியாக தாக்கமேற்படுத்தியிருந்தது தேசத்தை கட்டியெழுப்புவதற்கு சாமர்த்தியமற்ற நிலையில் ஏற்பட்டிருந்த, இனம், மதம் மற்றும் குல அடிப்படையில் வளர்ச்சியடைந்த பேதங்களாகும். அந்த முதன்மைப் பிரச்சினையை கவனத்தில் கொள்ளாது முன்வைக்கும் எந்தவொரு தீர்வும் நாடு முகம் கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு தீர்வாகாதென்றும் அந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் வகையில் முறையான புதிய அரசியலமைப்பு சட்டவாக்கமொன்றை ஏற்படுத்தக்கூடிய இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.
  1. பொது வேட்பாளர் என்ற பிரச்சினையின்போது அந்த செயற்பாடு ஒரே குரலில் காணப்பட்டமையானது முன்னிறுத்தப்படும் வேட்பாளர் கட்சி அரசியலுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத, சகலரினதும் ஏற்றுக்கொள்ளும் தன்மைக்குள்ளான பக்கச்சார்பற்றவராக இருக்க வேண்டும். பக்கச்சார்பற்ற பொது வேட்பாளரிடம் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களாவன, இருக்கும் ஆட்சிமுறை சட்டவாகத்தை முன்வைக்கும் சாதாரண சட்டவாக்கம் மீள்திருத்தம் மூலம் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் நீக்கப்பட்டு இருந்த 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாகும். அந்த காரியத்தை ஆறுமாத காலத்திற்குள் முழுமைப்படுத்தி பொது வேட்பாளர் பதவியிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். அது பற்றி எனது மதிப்பீடாக இருந்ததும் முக்கியமானதும் பொது வேட்பாளர் யார்என்பதை முதலில் முடிவு செய்து கொள்வது அன்றி, சாதாரண சட்டவாக்க மீள்திருத்தத்திற்கு பதிலாக புதிய அரசியலமைப்பு சட்டவாக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ளும் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு அந்த சட்டவாக்கத்தில் உள்ளடக்க வேண்டிய முதன்மை கோட்பாட்டை அறிந்து கொண்டு அந்த முதன்மை கோட்பாட்டிற்காக எதிர்க்கட்சிகளுக்குள்ளே பொது உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின்னர்ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரையும் பாராளுமன்ற தேர்தலுக்காக பொது வேட்பாளர் பட்டியல் ஒன்றையும் அறிந்துகொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட மீள்திருத்த வேலைத்திட்டத்தை ஜனாதிபதிக்கு மாத்திரம் வரையறை படுத்துதல் பற்றியும் நான் பரிசீலித்தேன். அவ்வாறே பொது வேட்பாளர் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றத்தில் அதிக பலம் இருப்பது தோல்வியுற்றவரின் கட்சிக்கு என்பதால் தப்பித்தவறியேனும் அந்தக் கட்சி வரையறுக்கப்பட்ட மீள்திருத்த வேலைத்திட்டத்திற்கு பாதிப்பேற்படுத்தும் இடத்திற்கு சென்றால் அதற்கு கொடுக்கும் தீர்வு என்ன என நான் கேட்டேன். அந்தப் பிரச்சினைக்கு கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன வழங்கிய பதிலானது, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்றால், ஸ்ரீ.ல.சு. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முறையை நீக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பது தமக்கு நன்றாக தெரியும்.

அராஜக தன்மைக்குப் பதிலாக குழப்பமான நிலைமையொன்று

இறுதியில் பொது எதிர்க்கட்சிகள் மைத்திரிபால சிறிசேனவை தமது பொது வேட்பாளராக தெரிவு செய்ததன் பின்னர் தங்களுடைய வேலைத்திட்டமொன்றை முன்வைப்பதற்க பதிலாக நாட்டிற்கு முன்வைத்தது பொதுவான சமூகமொன்றிற்கான செயற்பாட்டை முன்வைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தையாகும். அதற்கு புதிய பிரிவுகள் சிலவற்றைச் சேர்த்துக் கொண்டிருந்தாலும் நிகழ்ச்சித்திட்டத்தின் சாராம்சம் ஒரே விதமானதாகும்.

நாட்டில் எது இடம்பெற்றாலும் அதிர்ஷ்டவசமாக பொது வேட்பாளராக போட்டிக்களத்திற்கு வந்தது அரசியலிலிருந்து வேறுபட்ட சுயாதீன ஒருவரன்றி அரசியல் நபரொருவராவார். சுயாதீன நபரொருவர் வெற்றி பெற்றிருந்தால் சாதாரண சமூகமொன்றிற்காக செயற்திட்டத்தின் நிபந்தனைகளுக்கேற்ப அவர்  ஆறு மாதங்கள் பூரணமானதன் பின்னர் பதவியிலிருந்து விலகி வீட்டிற்குச் செல்லவேண்டும்.வெற்றி பெற்ற பொது வேட்பாளர் சுயாதீன நபரொருவர் இல்லாதபடியால், அவர் ஆறுமாத காலம் பூரணமானதன் பின்னர்பதயிலிருந்து விலகி வீட்டிற்குச் செல்ல வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஐந்து வருடங்கள் பதவியில் நீடித்திருப்பதற்கு எதிர்பார்ப்பார். இதில் முக்கியமான விடயம் யாதெனில் வெற்றி பெற்றவர் தான் பெற்ற வெற்றியின் பின்னர் ஸ்ரீ.ல.சு. கட்சியில் பதவியுள்ள தலைவராக பதவி பெற்றிருந்த போதிலும் குறிப்பிட்ட மீள்திருத்த வேலைத்திட்டத்திற்காக ஸ்ரீ.ல.சு.கட்சியை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக தகுதி பெறாமலிருப்பதாகும். மைத்திரிபாலவிற்கு பதிலாக அரசியலுக்கு புறம்பான சுயாதீன நபரொருவர்வெற்றி பெற்றிருந்தால் ஏற்படவிருந்தது, ஸ்ரீ.ல.சு.கவை மீள்திருத்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் தெரிவு செய்யப்பட்ட நபருக்கு ஆறுமாதங்கள் முடிவடைந்ததன் பின்னர் பதவியை கைவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டியேற்பட்டால் நாடு முழுதாக அராஜகமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும் என்றாலும் தற்போது நாம் இருப்பது முழுமையான அராஜக நிலைமையிலன்றி, முழுமையான குழப்பமான நிலையிலாகும். அதை தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை  மற்றும் அதனுடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சிந்தனைக்குள்ளான குழப்பமான நிலையின் பிரதிபலனாக கருத முடியும்.

தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீ.ல.சு.கவின் தலைவராக பதவிபெற்றாலும் அரசாங்கத்தின் மீள்திருத்த வேலைத்திட்டம் அரசாங்கம் எதிர்பார்க்கும் விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு இடம் கொடுப்பதற்கு ஸ்ரீ.ல.சு.க விருப்பப்படவில்லை. ஸ்ரீ.ல.சு.கவின் அமைச்சர்கள் குழுவிற்கிடையே மூன்று கொள்கைகள் இருப்பது தெளிவாக தெரிகின்றது. ஒரு கொள்கை மைத்திரிபாலவிற்கு சார்பாகும். மற்றொரு கொள்கை மஹிந்தவிற்கு சார்பாகும். இந்த இரு பக்கத்திற்கும் இல்லாத மூன்றாவது கூட்டமொன்றும் அங்கு உள்ளது. ஸ்ரீ.ல.சு. கட்சி அமைச்சர்குழு அரசாங்கத்தின் மீள்திருத்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தரும் என கூறினாலும் ஒத்துழைப்பிற்காக முன்வைக்கும் நிபந்தனைகள் மீள்திருத்த வேலைத்திட்டத்தின் காட்சிக்கு முரண்பட்டதாகும். ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கு ஸ்ரீ.ல.சு.க எதிராகும். அவர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது அதனை மீள்திருத்தம் செய்வதாகும். அவர்கள் எதிர்பார்ப்பது ஜனாதிபதி முறையை மீள்திருத்தம் செய்த பின்னரும் ஜனாதிபதியொருவரை தெரிவு செய்து நியமிக்க வேண்டியது தேசிய ரீதியாக நடத்தப்படும் தேர்தலொன்றின் மூலமே என்பதாகும். அரசாங்கத்திற்கு அடிபணியாது அரசாங்கத்தின் மீள்திருத்த வேலைத்திட்டம் முறைசாராத முறையில் ஆட்சி செய்தல் ஸ்ரீ.ல.சு.கவின் உபாயமார்க்க குறிக்கோளாக இருப்பது தெரிகிறது. ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பமான நிலைமையின் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறுதிப்பாடாகயிருப்பது எதிர்பார்க்கும் மீள்திருத்தம் 100 நாட்களுக்குள்  முடியாவிட்டால் 100 நாட்கள் பூரணமாகும்போது ஏப்ரல் 23ம் திகதி வாக்குறுதியளித்தபடி பாராளுமன்றத்தைக் கலைத்து பாராளுமன்றத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும்.

மதிநுட்பமுடைய எதிர்கால நோக்கொன்று இல்லாமலிருத்தல்

ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கு உண்மை நிலை மற்றும் மதிநுட்பமுடைய எதிர்கால நோக்கொன்று இருந்திருந்தால் மற்றவர்களிடம் பெற்ற கடனுக்கு இலகுவான மீள்திருத்த வேலைத்திட்டத்திற்குள் இருகாமல் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியின் பின்னர்தற்காலிக ஆட்சியொன்றை ஏற்படுத்திக் கொண்டு பாராளுமன்றத்தைக் கலைத்து பொது பட்டியலொன்றின் கீழ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இடமொன்றிற்கு செல்ல வேண்டியிருக்கும். அவ்வாறு இடம்பெற்றிருந்தால், ஜனாதிபதித் தேர்தலின்போது மாற்றமொன்றிற்காக முன்வந்த மக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியது, மிகவும் நிம்மதியான உணர்வுடனாகும். அப்போது ஜனாதிபதித் தேர்தலின்போது தோல்வியுற்ற கட்சிகளின் கூட்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வது அரச அதிகாரம் இன்றி தோல்வியுற்ற உணர்வுடனாகும். அவ்வாறான தேர்தலொன்றின் மூலம் வெற்றிகரமான ஒற்றுமைக்கு தெளிவாக  காணக்கூடிய வெற்றியொன்றை சொந்தமாக்கிக் கொள்வதற்கு இடமிருந்தது போலவே, அவ்வாறே இடம்பெற்றிருந்தால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி நியமனம் பெறும் ஸ்ரீ.ல.சு.கட்சி அமைச்சர்கள் மீள்திருத்த வேலைத்திட்டத்திற்கு வெற்றிகரமான முறையில் பங்களிப்புச் செய்வதற்கு இடமிருந்தது.

என்றாலும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டதன் பின்னர், அவசரமான பாராளுமன்றத் தேர்தலொன்றுக்குச் செல்லாமல் வரையறுக்கப்பட்ட மீள்திருத்த வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு வகிக்கும் வெற்றியடையாத முயற்சியின் பின் இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தலொன்றின் போது ஜனாதிபதித் தேர்தலொன்றின் வெற்றிக்கு பங்களித்த பிரிவினர் அதற்கு சமமான ஆர்வத்துடன் பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு பங்களிப்புச் செய்வார்என நினைக்க முடியாது. மறு பக்கம் பார்த்தால் பாராளுமன்றத் தேர்தலொன்றின் போது வெற்றி பெற்றவருக்கு கிடைக்கும் வெற்றியானது ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்உடனடியாக நடத்தப்படும் தேர்தலொன்றின் மூலம் கிடைக்கும் வெற்றியைப் போன்றே மிகப் பெரியதாக இருக்கும் என நினைக்க முடியாது. தற்போது வெற்றிப் பெற்ற பிரிவினர்இருப்பது ஒற்றுமைப் பண்புள்ள ஒருவரைப் போன்று செயற்படும் இடத்திலன்றி, பேதங்கள் நிறைந்த நிலைமையிலாகும். ஒரு பக்கத்திற்கு பயணம் செய்யும் இடத்திற்கன்றி பல பக்கங்களுக்கு இழுக்கும் இடத்திற்காகும். ஜனாதிபதித் தேர்தலொன்றிபோது மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடைச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் மத்தியிலும் இருப்பது சோர்ந்துப்போன ஆர்வமாகும். கூட்டுக் கட்சிகளின் தலைவர்களிடையே இருக்கும் நம்பிக்கையில் எந்தவொரு முழுமையும் ஏற்பட்டிருக்கும் என சொல்ல முடியாது. அவர்கள் தரும் வாக்குறுதிகள் அவ்வாறே நிவர்த்தி செய்யப்படும் என பெரிய நம்பிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டு இருந்த நிலையில் ஊழல் செய்தோருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கும் முறையொன்று பின்பற்றப்படும் என்றும் நம்பினர். அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே அதே போல் நடைபெறாமல் இருந்தமையால் தற்போது அவர்களிடையே இருப்பது எதிர்பார்ப்பற்ற நிலைமையாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 

தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரே குரலில் கூறிக்கொண்டிருப்பது, 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் உள்ளடங்கும் விடயங்கள் அந்த 100 நாட்களுக்குள் முடிக்கப்படா விட்டாலும் ஏப்ரல் 23ம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும் என்பதாகும். அந்தக் கருத்துக்கு விருப்பமில்லாத சிலரும் அரசாங்கத்திற்குள் இருப்பது தெரிகின்றது. அவர்கள் கூறுவது, வழங்கப்பட்ட உறுதிகளை நிறைவேற்றுவதற்கு 100 நாட்கள் போதுமானதாக இல்லாவிட்டால் மேலதிகமான காலத்தை எடுத்துக் கொண்டு அவற்றை முழுமைப்படுத்தியதன் பின்னர்மாத்திரமே பாராளுமன்றத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும் என்பதாகும். என்றாலும் உண்மையிலேயே தற்போது இருக்கும் காலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அப்பால் ஸ்ரீ.ல.சு.க. தடம் பிரழுவதை பிரச்சினையாக கருத முடியும். ஸ்ரீ.ல.சு.கட்சியிடம் ஏற்றுக் கொள்ளும் தன்மை இருக்குமாயின் மேலதிக காலத்தை பெற்றுக்கொண்டேனும் உறுதிப்படுத்தியிருக்கும் மீள்திருத்தங்களை முழுமைப்படுத்தல் முக்கியமானதாகும். என்றாலும் ஸ்ரீ.ல.சு.கவில் உபாய மார்க்கம் குறிக்கோளாக இருப்பது ஒத்துழைப்பு வழங்கும் போர்வையில் மீள்திருத்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதை தடுப்பது எனில் செய்யாத மருத்துவத்திற்காக காலத்தைக் கடத்துவதை விட பாராளுமன்றத் தேர்தலொன்றுக்குச் செல்வது நாட்டிற்கு நல்லது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பது மிகவும் தொல்லைப்படுத்தும் நிலைமையிலாகும். அவர் பிரதமர் என்ற போதிலும் பாராளுமன்றத்தில் அதிக பலம் இருப்பது ஸ்ரீ.ல.சு.க.விற்கே. அதனை கேலிக்குரிய நிலைமையாக கருதக்கூடியதாக இருப்பதோடு, அந்த கேலிக்குரிய நிலைமையிலிருந்து மிக விரைவில் விலகி பாராளுமன்றத்தில் அதிக பலத்துடனான பிரதமரின் நிலைக்காகுதல் அவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரணில் விக்கிரமசிங்க முதலில் இருந்தது குறிப்பிட்ட மீள்திருத்த வேலைத்திட்டங்களுக்காக அன்றி நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு பதிய ஆட்சிமுறை சட்டவாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கூறுகின்ற நிலைமையிலாகும். என்றாலும் ஏதோவொரு காரணத்தினால் அவர்இந்த குறிப்பிட்ட மீள்திருத்த வேலைத்திட்டத்தில் கைதான நிலைக்கு உள்ளாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி அறிவோடு செயற்படாவிட்டால் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவின் உறுதிப்பாடு ஜனாதிபதியை மிகப்பெரிய நன்னடத்தையுள்ள நெருக்கடிக்கு தள்ளிவிட காரணியாக இருக்கலாம். ஐ.தே.க. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்தது பிரதான அரசியல் பொறிமுறையாகும். அவர்அதற்காக ஐ.தே.கவுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளில் ஏப்ரல் 23ம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வாக்குறுதி முக்கியமான வாக்குறுதியாக கருதக்கூடியதாகும். பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவதா இல்லையா என்ற இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இருப்பது ஜனாதிபதிக்கேயாகும். ஆகையால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை நிராகரிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கேயுள்ளது. அப்படியானால் பதவிகளிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளுதல் அல்லது பதவிகளிலிருந்து விலகி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் ஆகிய கொள்கையில் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் இயலுமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐ.தே.கவுக்கும் உள்ளது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.தே.க.வை அநாவசிய நிலைமைக்கு தள்ளுவதற்கு காரணியாகும் வகையில் ஜனாதிபதி எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும் அது ஜனாதிபதியை பதவியில் நியமித்த மக்களின் விசேடமாக ஐ.தே.கவுக்கு நம்பிக்கையுள்ள மக்களின் மிகப்பெரிய கவலைக்கு காரணியாவதை தடுக்க முடியும். அவ்வாறான நிலைமையில் ஜனாதிபதி மிகப்பெரிய நல்லொழுக்கமுள்ள நெருக்கடிக்குள் தள்ளிவிடும் நிலைமையொன்றை ஏற்படுத்துவார். அவ்வாறான நியமனத்திற்கு ஜனாதிபதி ஒருபோதும் சம்மதிப்பார்என்று நினைக்க முடியாது.

ஜனாதிபதியால் ஐ.தே.கவுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சமாதானம் மற்றும் நட்பை முற்று முழுதாக கைவிட்டு மறுபடியும் ஸ்ரீ.ல.சு.க.வுடன் செயற்படும் இடத்திற்கு சென்றுவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபாலவுக்கு ஒத்துழைப்பு வழங்கியது ஸ்ரீ.ல.சு.கவின் மிகச் சிறிய குழுவினர் மாத்திரமே. பொதுமக்கள் பிரதிநிதிகளின் மிகப்பெரிய பெரும்பான்மையினர் மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியினர், மிக விசாலமான பெரும்பான்மையினர் மைத்திரியை துரோகியைப் போன்றே எண்ணுகின்றனர். உண்மையிலேயே அவர் அச்சந்தர்ப்பத்தில் செய்தது துரோகச் செயலன்றி, மிகவும் நல்ல சேவையொன்றாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோல்வியடையச் செய்தது நல்லதொரு எதிர்கால பயணத்திற்கு அத்தியாவசிய நிபந்தனையாக இருந்த போதும் ஸ்ரீ.ல.சு.கவிலிருந்து பிரிந்து எதிர்க்கட்சியில் பொது வேட்பாளராக போட்டியிட்டதன் பின்னர் அது வரலாற்று சிறப்பு மிக்க அவசியத்தை முழுமைப்படுத்தியது. என்றாலும் அந்த ஆக்க பூர்வமான மாற்றத்தின் வேலைச் சுமையோடு ஸ்ரீ.ல.சு.க. அவருக்கு துரோகியானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கும் வகையில் அவர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் அவருடை தலையெழுத்து மிகவும் பயங்கரமானதாக மாறியிருக்கும். அவ்வாறான நிலைமையொன்றின்போது ஸ்ரீ.ல.சு.கவினரோ அல்லது அமைச்சர்களோ அவருக்காக கவலைப்பட்டிருப்பார்கள் என்று நினைக்க முடியாது. வெற்றியின் பின்னரும் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அமர்த்தப்பட்டதன் பின்னரும் ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் அவரை கவனித்தது, கௌரவமாகவன்றி வேண்டாத விருந்தாளிக்கு கறி பங்கிடுவது போன்றாகும். இன்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மிகப்பெரிய பெரும்பான்மையினத்தவரிடையே ஜனாதிபதி மைத்திரி தொடர்பில் இருக்கும் நல்லதொரு எண்ணமன்றி விரோத மனப்பான்மையாகும். ஆகையால் ஜனாதிபதித் தேர்தலின் போது வெற்றி பெற்று அதிகாரத்தின் மூலம் அடைக்கலம் தேடும் நிலைமைக்கு உட்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அரசியல் தலையெழுத்து மிகவும் சோகமானதாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாராளுமன்றத் தேர்தல்

இடம்பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலின் முன்னிலையில் ஸ்ரீ.ல.சு.க இரண்டாக பிளவுபடும் நிலைமையொன்று ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதில் குறுகியகால இலாபம் கிடைக்கப்போவது ஐ.தே.க.வுக்கே. ஸ்ரீ.ல.சு.கவை தங்களுக்கு ஏற்ற விதத்தில் வைத்துக் கொள்வதற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு அவசியமாயின், தங்களுக்கு கீழ்ப்படியாத நபர்களுக்கு நியமனபத்திரம் வழங்காமலிருக்கும் கொள்கையொன்றை பின்பற்றுவது கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும். அதில் தவிர்க்க முடியாத மற்றொரு பிரதிபலனாக இருப்பது அவர்கள் எல்லோரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவோடு சேர்ந்து கொண்டு மஹிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் மாற்று ஸ்ரீ.ல.சு.கவொன்றை ஏற்படுவதாகும். ஸ்ரீ.ல.சு.கவின் இந்த இரு பிரிவுகளும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அந்த இரு பிரிவினருக்கிடையே ஏற்படும் அரச போட்டியின் போது தப்பித் தவறியேனும் மைத்திரியின் கட்சி மஹிந்தவின் கட்சி முன்னுக்கு வருவதற்கு திறமை பெற்றால் ஜனாதிபதி அரசியல் அர்த்தத்தில் விழுவதானது அழகற்ற மற்றும் கேலிக்குரிய நிலைமையிலாகும். ஆகவே, ஜனாதிபதியின் நன்மைக்கு காரணமாக இருப்பது ஐ.தே.கவுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நட்பை மேலும் பாதுகாத்துக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது எந்தவொரு பிரிவினருக்கும் உதவி செய்யாத முன்னிற்கும் மற்றும் சுயாதீன தன்மையாகும். அவ்வாறான நடைமுறையை ஜனாதிபதி தனதாக்கிக் கொண்டு கௌரவத்தையும் கீர்த்தியையும் மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கு காரணமாக அமையும்.