Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

சீன பொறியிலிருந்து மீள்தல்


chaina

- விக்டர் ஐவன்

 

தீவொன்று என்ற அடிப்படையில் இலங்கை பூகோள ரீதியாக அமையப்பெற்றுள்ளதன் அடிப்படையில் பெற்றிருக்கும் விசேடத்துவத்தைக் கருத்திற் கொண்டு அதற்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தாமலிருப்பதே ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணியாகும். தீவொன்றென்ற ரீதியில் இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்திருப்பது ஐரோப்பா, இந்தியா, தூரகிழக்கு, அவுஸ்திரேலியா போன்ற கடல் வழிப்பாதையின் மத்தியஸ்த நிலையத்திலாகும். அதேநேரம், இந்தத் தீவானது இந்து சமுத்திரத்தின் தெற்கு மூலையின் மன்னார் விரிகுடா மற்றும் போக் சமுத்திரத்தின் மத்தியஸ்தத்தில் அமைந்துள்ளது.

இலங்கையின் அமைவு இடம்பெற்றிருக்கும் இந்த உபாய வழியிலான முக்கியத்துவம் காரணமாக இலங்கை எல்லாக் காலங்களிலும் உலக வல்லரசுகளின் கவனத்தை ஈர்க்கப்பெற்றிருந்ததை போன்றே அயல் நாடான இந்தியாவினதும் கவனத்தை ஈர்த்து வந்துள்ளதென்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

இலங்கையின் அமைவைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பு வளர்ச்சியினடிப்படையில் நோக்கும்போது கட்டுப்பாடற்ற வெளிநாட்டுக் கொள்கையொன்றை இலங்கை தெரிவு செய்துகொள்ள வேண்டிய சிறந்த வெளிநாட்டு கொள்கையாகவே கருதப்படுகிறது. நாடு அமைந்திருப்பது இந்தியாவின் வாய்ப்பகுதியிலென்பதால் இந்தியாவின் சந்தேகத்துக்கு காரணமாக அமையாமல் இருப்பதன் அவசியத்தைப் போன்றே பெரும் வல்லரசுகளுக்கிடையேயான போட்டியின்போது எந்தவொரு வல்லரசோடும் இணைந்து செயல்படாதிருக்கக்கூடிய வழிமுறையொன்றினை பின்பற்றுவதும் முக்கியமானதாகும்.

அமெரிக்காவோடு ஒன்றிணைந்து செயற்படும் நிலைமையிலிருந்த ஜனாதிபதி ஜயவர்தன நினைத்தது உலக வல்லரசு இருப்பது எம்மோடெனில், ஐரோப்பிய நாடுகள் இருப்பதும் எம்மோடெனில் இந்தியாவை கருத்திலெடுக்காது செயல்படும் கொள்கையினால் அச்சமடையத் தேவையில்லையென்பதே. அதன் மூலம் அவர் பூகோள ரீதியான அரசியல் யதார்த்தத்தின் முன்னிலையில் குருடரொருவராகவே செயற்பட்டார்.

இந்தியாவால் விடுக்கப்பட்ட பலமான எதிர்ப்புகளைக் கவனத்திலெடுக்காது சிலாபம் கடற்கரையில் அமெரிக்காவுக்கு வானொலி நிலையமொன்றினை நடத்திச் செல்வதற்கு வழி அமைத்துக் கொடுத்தது. அந்த வானொலி நிலையத்தை தமது நாட்டில் உளவு பார்ப்பதற்கு நடத்திச் செல்லும் உளவுப் பிரிவு மத்திய நிலையமாகவே இந்தியா கருதியது. அதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ஜயவர்தன திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத்தை புனரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுவனத் தொகுதியொன்றுக்கு வழங்கினார். இவை அனைத்தையும் இந்தியா நோக்கியது இலங்கை இந்திய விரோதி அமெரிக்க வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் மத்திய நிலையமாக கொண்டிருப்பதனாலாகும். அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியா இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை உருவாக்கும் கொள்கையை அமுல்படுத்தியது.

வடக்கின் பிரிவினைவாத இளம் போராட்டக் குழுவினருக்கு இந்தியா தமது நிலத்தை பயன்படுத்துவதற்கு இடமளித்ததன் மூலம் தொடர்ச்சியாக அவர்களுக்கு பயிற்சி பெறுவதற்கு அவசியமான வளங்களையும் வழங்கியது. தாம் பின்பற்றி வந்த வெளிநாட்டுக் கொள்கையின் அறியாமையை ஜனாதிபதி ஜயவர்தன புரிந்து கொண்டது இந்தியா இலங்கையில் ஆகாய எல்லையை பலாத்காரமாக ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்துக்கு வான் மூலம் நிவாரணம் கொட்டிய சந்தர்ப்பத்திலாகும். அந்த தீர்க்கமான சந்தர்ப்பத்தில் ஜேயாருக்காக குரலெழுப்ப அமெரிக்காவோ மேற்கு நாடுகளோ முன்வரவில்லை. இறுதியாக அந்த தலைவருக்கு இந்தியாவின் காலடியில் விழுந்து வணங்க வேண்டிய நிலையேற்பட்டது.

ஜனாதிபதி ஜயவர்தன இலங்கையின் உபாய ரீதியிலான அமைவிற்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கொள்கையொன்றை அமுல்படுத்தி வந்திருப்பாரேயானால் பிரபாகரனால் இந்த நாட்டுக்கு இந்தளவு பெரிய சவாலொன்று இடம்பெறாமல் இருந்திருக்கும். அதேவேளை ஜே.வி.பியின் இரண்டாவது போராட்டமும் இடம்பெறாமல் இருந்திருக்கவும் கூடும்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் தவறான வெளிநாட்டுக் கொள்கையினால் நாட்டில் அந்தளவு பாரிய அழிவு இடம்பெற்றிருந்த நிலையிலும் அதன் மூலம் சிறந்த பாடமொன்றை கற்றுக்கொள்ள நாட்டுக்கு முடியாமல் போனது. அந்த விடயத்தில் நாட்டை பயங்கரமான நிலையொன்றுக்கு இட்டுச் சென்ற அடுத்த தலைவராக கருதப்படுபவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

அவர் இலங்கையின் அமைவைக் கருத்திற் கொள்ளாது சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்த இலாபத்தை கருத்திற் கொண்டு சீனாவோடு ஒன்றிணைந்து செயல்படும் நிலையொன்றுக்கு சென்றதால் தொடராக உலக ஆதிபத்தியத்தை தமதாக்கிக் கொள்ளும் நோக்கத்தை வெற்றி கொள்வதற்கு இலங்கையை முக்கிய மர்மஸ்தானமாக ஆக்கிக் கொள்வதற்கு சீனாவுக்கு வாய்ப்பளித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியவர்கள் அங்கு கருத்திலெடுத்தது தனக்கு தனிப்பட்ட ரீதியிலும் நாட்டுக்குப் பொதுவாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதார நலன்களை மாத்திரமாகும். எனவே, நாட்டை அழிவுக்கு இட்டுச்செல்லும் அழிவுகரமான பொருளாதார பிரச்சினை தொடர்பில் அவர் கவனம் செலுத்தவில்லை. சீன உதவியின் கீழ் அம்பாந்தோட்டையில் கட்டியெழுப்பப்பட்ட துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம், கொழும்பு தெற்கு துறைமுக திட்டம், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் காத்திரமன்றி இந்தியாவினதும் பலமான சந்தேகத்துக்குக் காரணமாகியது. அதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட துறைமுக நகரம் அந்த சந்தேகத்தை பன்மடங்காக்கியது.

அது இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களை விடவும் அதிகூடிய முதலீட்டுச் செலவைக் கொண்ட திட்டமாக கருதப்படுகின்றது. அதன் முதல்கட்ட முதலீட்டின் பெறுமதி 1340 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் மிக முக்கியமானதென்னவெனில், இந்தத் திட்டமானது இலங்கையின் கருத்துக்களையோ ஆலோசனைகளையோ கருத்திற் கொள்ளாது மேற்கொள்ளப்பட்ட திட்டமொன்றாகும். ஒட்டுமொத்த திட்டத்துக்குமான முழு செலவையும் ஏற்றுக் கொண்டிருப்பது சீனாவாகும்.

இதன் மூலம் கடலை நிரப்பி 233 ஹெக்டயார் பரப்புக் கொண்ட பாரிய தீவொன்றை உருவாக்கி அங்கு மிக நவீனமான நகரமொன்றினை நிர்மாணிப்பதாகும். அந்தத் தீவானது 3.25 கிலோமீட்டர் நீளம் கொண்ட நீர்நிலையொன்றையும் மிகப்பெரிய அலங்காரம் கொண்ட கால்வாயொன்றையும் கடற் கரையையும் உள்ளடக்கியது. இந்தத் திட்டம் நீர், மின்சாரம், பெருந்தெரு, கழிவுப்பொருளகற்றல் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருக்கும். உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய நகரத்தில் சர்வதேச வர்த்தக மையம், கப்பல் நிறுவனங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள், காரியாலய தொடர்மாடிகள், தொடர்மாடிவீடுகள், ஹோட்டல்கள், தவறணைகள் விளையாட்டு மைதானம் போன்றவையும் உள்ளடங்கியிருக்கும்.

தீவின் மொத்த நிலப்பரப்பு 233 ஹெக்டயார்களாவதோடு அதில் 125 ஹெக்டயார் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்துக்கே சொந்தமாகும். மீதி 108 ஹெக்டயார்களும் சீன முதலீட்டு செலவை தீர்த்துக் கொள்வதற்கு இரு முறைகளில் சீனாவுக்கு கையளிக்கப்படுகின்றது. அதில் 88 ஹெக்டயார் வழங்கப்படும் 99 வருடகால குத்தகையினடிப்படையிலாகும். மீதி 20 ஹெக்டயாரும் கையளிக்கப்படுவது ஒரு காலத்தில் உரிமையாகும் என்ற அடிப்படையிலாகும். சரியான உண்மையானது, தெளிவில்லாமலுள்ள போதிலும் விடயமறிந்த சிலர் குறிப்பிடுவது, தீவின் நிலப்பரப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விடவும் 37 ஏக்கர்கள் அதிகமானதென்றும் அந்த 37 ஏக்கர்களதும் உரிமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட உரிமைக்கு கையளிப்பதற்கான இணக்கப்பாடொன்றை நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும். இந்த தீவின் ஒரு பேர்ச்சஸ் பரப்பின் பெறுமதி கணிப்பிடப்பட்டிருப்பது 24 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையிலாகும்.

இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு முன் துறைமுக அதிகார சபை சீன நிறுவனத்துடன் நல்லிணக்க ஒப்பந்தமொன்றினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமையும் ஒப்பந்தமொன்றினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான தீர்;மானங்கள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிசோதனைக்கு உள்ளாகவில்லை. இத்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ள காரணங்களுக்கும் மற்றும் ஒப்பந்தத்திலுள்ள காரணங்களுக்குமிடையேயும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்தத் திட்டத்தினால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதிலுள்ள பெரும் குறைபாடு, அந்த அனைத்து தவறுகள், குறைபாடுகளைக் காட்டிலும் இந்தத்திட்டம் நாட்டில் ஏற்படுத்தவுள்ள அரசியல் பிரச்சினையாகும். இப்பிரச்சினையை இலங்கையின் பாதுகாப்பை துச்சமாக மதித்த கடுமையான பிரச்சினையொன்றாகவும் பார்க்க நேரிடலாம். இது வளர்ந்து வரும் வல்லரசொன்றுக்கு தமது ஆதிபத்தியத்தை செயல்படுத்தக்கூடிய உபாய மார்க்கமொன்றிற்கான முக்கிய அங்கமொன்றென்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அது சீனாவினால் செயல்படுத்தியுள்ள புதிய கடல் வழி தொடர்பான முக்கிய உபாய மார்க்க மத்தியதலமாகுமெனில் அது எப்போதாவது இலங்கையின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்துமென்பதை தடுக்க முடியாமல் போகும். தற்போது இது இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் பலத்த சந்தேகத்துக்கு இலக்காகியிருப்பின் தற்போதாவது அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு நிலைக்கு நாம் செல்ல வேண்டும். சிலாபம் கடற்கரையில் அமெரிக்காவுக்கு ஒலிபரப்பு நிலையமொன்றை நடத்திச் செல்வதற்கு இடமளித்ததனால் ஏற்பட்ட விளைவு எந்தளவு பெரியதென்பதை நாம் அறிவோம். மீண்டும் நாட்டை அவ்வாறானதொரு துரதிர்ஷ்ட நிலைமையொன்றுக்கு இட்டுச் செல்வதற்கு காரணமான விடயங்களை சீனாவுக்கு மாத்திரமல்ல எந்தவொரு பலசாலிக்கும் இடமளிக்க வேண்டியதில்லை. நாம் இந்தியாவோடு ஒப்பந்தம் புரிந்திருப்பதை மறந்து விடக்கூடாது.

நாம் மேற்கொள்ள வேண்டிய சிறந்த விடயம் இந்தத் தீவை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை முழுமையாக கைவிடாது சீனாவோடு பேச்சுவார்த்தை மேற்கொண்டு இந்தத் தீவை உரிமையாக்கிக் கொள்ளக்கூடிய 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் நிபந்தனையை நீக்கிக் கொள்வதற்கு சீனாவை இணங்கச் செய்து கொள்வதாகும். இத்திட்டத்திற்கான செலவை நீண்ட காலத்துக்கு பகுதி பகுதியாக செலுத்துவதற்கு அவர்களோடு இணக்கப்பாட்டுக்கு வருவதாகும். அது நாட்டை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் கடன் சுமையாயினும் அந்தப் பிரச்சினையை இரு பிரிவினருக்கும் பாதகமில்லாமல் தீர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு வழியாகும். இதன் மூலம் சீனாவுக்கு காணி உரிமை இல்லாதாகுமெனில் அது இலங்கை அரசாங்கத்துக்கு முழு உரிமையும் கொண்ட தீவாக மாத்திரம் அமையுமாயின் அந்த தீவு வேறொரு வல்லரசுக்கு சந்தேகத்திற்கோ எதிர்ப்புக்கோ காரணமாக அமையாது. இத்திட்டத்தை இடைநடுவில் கைவிடும் வழிமுறையை விட அவ்வாறானதொரு தீர்வு இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்.

ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகளுக்கமைய இந்த தீவுத் திட்டத்துக்காக பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது பெப்ரவரி மாதம் குறித்ததொரு தினத்திலாகும். எனினும் பெப்ரவரி மாதத்தில் அதற்கான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. இந்தத் திட்டத்துக்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய தினத்தில் அதனை பெற்றுக் கொள்ளாதிருந்ததன் காரணமாக இத்திட்டம் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்துக்கு முடியும். நாம் சீனாவோடு கொண்டிருக்கும் நட்பை கைவிட வேண்டியதில்லை. எனினும் எந்தவொரு வல்லரசோடும் இணைந்து செயற்படும் நிலையொன்றுக்கு செல்ல வேண்டியதில்லை.