Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

சட்டத்தை விஞ்சுபவர்கள் எவருமில்லை


ravaya editorial logo

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் விமர்சனம் பற்றி பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் காட்டிய எதிர்ப்பானது நாட்டின் சட்டத்திற்கு மேலாக நபரொருவர் அல்லது நபர்கள் நிறுவுவதற்கு அவர்கள் காண்பிக்கும் அதிகபட்ச விருப்பமாகும். அவர்கள் சாதாரணமாக கூறுவது நாட்டை காப்பாற்றிய வீரருக்கு கை வைக்க வேண்டாம் என்றாகும். நாட்டைக் காப்பாற்றியது யாரிடமிருந்து, எவ்வாறு? என்ற சாதாரண கேள்வியொன்று எங்களுக்கு இருந்த போதிலும் அது அவ்வாறே என்று கூறி ஏற்றுக் கொண்டாலும் நாட்டை விடுவித்த பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்சம் அல்லது வேறு ஏதோவொரு குற்றம் சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பது ஏன்?

எவ்வாறெனினும் முன்னாள் ஜனாதிபதி இருந்தது சட்டத்திற்கும் மேலாக.  ஜனாதிபதிக்கு அரசாட்சி சட்டவாக்கம் மூலம் கிடைத்திருக்கும் எதேச்சதிகார பதவிபட்டங்களுக்கு மேலதிகமாக அவர் ஒரு போதும் சட்டத்தை மதிக்கவில்லை. இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை முறித்தார். சட்டத்திற்கு முரணாக வேண்டுமென்றே செயலாற்றினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவரை தோல்வியடையச் செய்த ஒரு காரணி அதுவாகும். ஆச்சர்யம் என்னவெனில் தோல்வியடையச் செய்த பின்னரும் அந்த தோல்வியின் மூலம் பாடம் கற்றுக் கொள்ளாமல் அவரின் ஆதரவாளர்கள் மேலும் அவரை சட்டத்திற்கு முரணாக வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

தற்போது அவரின் மற்றைய குடும்ப அங்கத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, இந்த தோல்வியடைந்த பிரிவினரிடையே இருந்து சம எதிர்ப்பு ஏற்படுகின்றது.

சட்டத்திற்கு புறம்பாக எவரும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி சட்டத்திற்கு உடன்பட்டவர் எனின், செய்ய வேண்டியது இலஞ்ச ஆணைக்குழுவின் பரீசீலனைகளுக்கு முகம் கொடுத்து தான் குற்றமற்றவர் எனின் தனது பெயரை சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் சர்வதேச குற்றவியல் சட்டமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முன்னின்று தேவையெனின் மின்சார கதிரைக்கேனும் செல்வதற்கு தயாராக இருப்பதாக வெளிப்படையாக கூறிய அவர், இலஞ்ச ஆணைக்குழுவின் குற்றத்திற்கு முன்னால் இவ்வளவு பாதுகாப்புடன் இருப்பதன் மூலம் மிகத் தெளிவாக தெரிவது அவருள்ளே இருக்கும் குற்றவாளி என்ற நிலைப்பாடாகும்.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்திற்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பொது மக்களின் குற்றச்சாட்டாக இருந்தது, ஊழல் செய்வோருக்கு எதிராக போதுமானளவு வேகமாக காரியங்களை செய்யாமையும், வசதிபடைத்தோர் என்ற போர்வையில் இருக்கும் ஊழல் செய்வோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமையுமாகும். அதற்காக பாதிப்பை ஏற்படுத்திய காரணிகள் பலவுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்ற இடங்களுக்கு ராஜபக்ஷ அரசின் மூலம் அரசியல் பதவிப்பிரமானங்கள் மற்றும் கட்டாயப்படுத்தல் அதிகாரிகளின் சுயநலவாதத்தன்மை,   போதுமானளவு அதிகாரிகள் அல்லது அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்காமை போன்ற பல காரணிகள் அதற்கு ஏதுவாக இருந்தன. சிறிசேனவின் அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே இடம்பெற்ற முக்கியமான ஒன்றாக அமைந்தது, இந்த நிறுவனங்களை சுயாதீனப்படுத்துவதும் சக்திபெறச் செய்வதுமாகும். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் பற்றி கடந்த காலங்களில் பலவிதமான குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. அவை மிகவும் தெளிவான தகவல்களுடனான ஊழல் குற்றச்சாட்டாகும். என்றாலும் அவை எது பற்றியும் ஆராயும் நிகழ்வொன்று ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெறவில்லை. ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்த பணிப்பாளர் நாயகம் உட்பட மற்றைய அதிகாரிகளும் கட்டளைகளுக்கு அடிபணிந்தோராவர். இல்லையென்றால் சுயாதீனமானவர்களாவர். அதற்கான பிரதிபலனானது, கடந்த அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தோருக்கு எதிராக அதிகமான குற்றச்சாட்டுக்களை தேடிப் பார்க்காமையும், ஆரம்பிக்கப்பட்ட ஆராய்வுகளை இடைநடுவில் நிறுத்திவிட்டு கடிதங்களை அடிப்படுத்தலுமாகும். விமர்சனத்திற்கு வரச் சொன்னபோது பாம்பொன்று கடித்து விட்டதாகக் கூறி அதனை இடைநடுவில் போட்டுவிட்டு அமைச்சர்கள் இருந்தது கடந்த அரசாங்கத்திலாகும்.

புதிய அரசாங்கம் புதிய பணிப்பாளர் ஒருவரை நியமித்தது. அவர், குறித்த துறையின் நடவடிக்கைகள் பற்றி அனுபவமுள்ள அதற்காகவே தன்னை அர்ப்பணித்த ஒருவராவார். ஆவர் எவருக்குமே சார்புள்ளவர் என்று தோல்வியுற்ற சில அமைச்சர்கள் அன்றி வேறு எவரும் கூற மாட்டார்கள். பதவிக்கு வந்தவுடனேயே இடைநடுவில் நிறுத்தப்பட்ட அல்லது பின்தள்ளப்பட்ட ஆவணங்களை திரும்பவும் வெளிக்கொனர்ந்து அவற்றை ஆராய்ந்து திரும்பவும் ஆரம்பித்து வைத்தார். புதிய அரசாங்கம் கொமிசனுக்கு தேவையான வசதிகள், அதிகாரிகளை வழங்கி கொடுத்தது. கொமிசன் திரும்பவும் வினைத்திறனுடனும் சுயாதீனமாகவும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

தற்போது இந்த எதிர்ப்பு கிளர்ந்தது அவ் வினைத்திறனுக்கு மற்றும் பாராபட்சமற்ற தன்மைக்கு எதிராக என்பது தெளிவாக தெரிகிறது. 19வது அரசியல்முறை சட்டவாக்க திருத்தச்சட்டமூலம் உயிர்  பிணைக்கு எடுத்து தங்களுடைய ஊழல்களை மறைப்பதற்கும் அவைபற்றி இடம்பெறும் பரீட்சித்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு சிலபேர் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.

நாடொன்று என்ற ரீதியில், நாங்கள் இருக்க வேண்டியது ஊழல் செய்வோரை சட்டத்திற்கு மேலாக நிறுத்தும் நிலையிலல்ல. எந்தவொரு நிலையிலேனும் ஊழல் செய்வோரை சட்டத்திற்கு முன் நிறுத்தி அவர்கள் தொடர்பில் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சரியான நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு கட்டாயப்படுத்தும் முறைமையாகும்.

அவ்வாறன்றி, நாட்டை மீட்ட வீரர், வீரரின் சகோதரர் போன்ற திரைமறைவில் இருப்போரை வெளியில் கொண்டு வந்து இலங்கை வரலாற்றில் உண்மையாக ஊழல் செய்வோரை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த நாட்டின் புத்திஜீவிகள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.