Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

குற்றப்பிரேரணைக்கான சூழ்ச்சி


ஜனாதிபதி குடியரசின் தன்னாட்சி பாதிப்புறும் வகையில் வேண்டுமென்றே அரசாங்கத்திற்கு துரோகமாக செயற்படும் அரசியல்முறை சட்டவாக்கத்தை மீறியிருப்பதாக குற்றம்சாட்டி ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைக்க வேண்டுமென்ற எண்ணம் ஸ்ரீ.ல.சு.கவில் இருக்கும் மைத்திரிக்கு எதிராக செயற்படும் சிலபேரைக் கொண்ட குழுவினரிடையே கலந்துரையாடலுக்கு உட்பட்டிருப்பதாக அறியக்கூடியதாக இருந்தது. அவர்களுடைய உபாய மார்க்க எதிர்பார்ப்பாக இருப்பது ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இருக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்து அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் அரசாங்க ஆட்சியை கைப்பற்றிக் கொண்டு தேர்தலொன்றுக்கு செல்வதாகும்.

அரசாட்சி சட்டவாக்கத்திற்கேற்ப ஜனாதிபதிக்கு எதிராக சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் குற்றப்பிரேரணை ஆலோசனையொன்றிற்காக மூன்றில் இரண்டு கையொப்பம் தேவையாகும். என்றாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை சட்டமன்றத்தின் மூலம் பரீட்சித்துப் பார்த்து அறிக்கையிடும் அளவிற்காகும் என சபாநாயகர் திருப்திப்படுவாராயின் பாராளுமன்றத்தின் முழு அமைச்சர்களின் தொகையில் அரைப்பங்கிற்கு குறையாத அமைச்சர் தொகையொன்று கைச்சாத்திட்டிருக்கும் சந்தர்ப்பத்திலேனும் குற்றப்பிரேரணை யோசனையொன்றை சபாநாயகருக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

19 அங்கீகரிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அந்த விவாதத்தின் இறுதியில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி நினைத்திருப்பதாக பிரஜைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் 20ம் திகதி நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அறிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் திகதி மே ஐந்தாம் திகதி என கூறப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஆணைக்குழுவிடம் அழைப்பதற்கு எதிராக தயாரிக்கப்பட்டிருக்கும் கடிதத்திற்கு பாராளுமன்ற அமைச்சர்கள் 113 பேர் கையொப்பமிட்டிருக்கும் அதேவேளை, ஜனாதிபதிக்கு எதிராக முன்வைத்திருக்கும் குற்றப்பிரேரணை தொடர்பில் அவர்கள் அனைவரினதும் கையொப்பத்தை பெற்றுக் கொள்ள முடியுமென குற்றப்பிரேரணையை செயற்படுத்துபவர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது என அறியக்கிடைத்துள்ளது. நிதி அமைச்சருக்கு எதிராக முன்வைக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கைச்சாத்திடும் செயற்திட்டத்தை காரணமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு எதிராக ஒப்படைக்கப்பட்ட குற்றப்பிரேரணை அப்போதிருந்த சபாநாயகர் எம்.எச். மொஹமட் ஏற்றுக் கொண்டது சட்டவாக்கபூர்வமாக இருக்க வேண்டிய அதிக பட்ச கையொப்ப எண்ணிக்கைக்கூட இல்லாத நிலையிலாகும். சட்டத்திற்கு முரணான போதிலும் சபாநாயகர் அந்த குற்றப்பிரேரணை செயற்திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக செயற்பட்டார்.

சுபாநாயகரின் ஒத்துழைப்பு இருக்குமாயின் 113 கையொப்பங்களின் மூலம் குற்றப்பிரேரணையொன்றை ஆரம்பிக்க முடியுமான போதிலும் குற்றப்பிரேரணை ஒன்றை முன்னெடுத்துச் செல்வதென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஒத்துழைப்பு அத்தியாவசியமாகும். என்றாலும் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை முறையொன்று சபாநாயகர் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும்வரை பாராளுமன்றத்தை கலைக்கும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லாமல் போகும்.