Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

இலங்கையில்  இனவாதப் படுகொலையொன்று இடம்பெற்றதா?


demala

- அஜித் பெரகும் ஜயசிங்க

 

இலங்கை அரசாங்கத்தின் மூலம் தமிழ் இனவாத படுகொலையொன்று நடைபெற்றிருப்பதால் அது சம்பந்தமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கொமிஷன் ஆய்வொன்றை நடத்த வேண்டுமென்று வட மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கையானது தமிழ் இதனவாதிகளின் மகிழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நிர்வகித்துச் செல்லும் வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையை முன் வைத்து கூறியது இவ்வாறாகும். அடிமைத்தன்மையில் இருந்துகொண்டு உரிமைகளை பெற்றுக் கொடுக்காது, நீதியை நிலைநாட்டாது பக்கச்சார்புடைய நிலைமையொன்றின் மூலம் வாழ்க்கை முறையை ஏற்படுத்த முடியாது. ஆகையால் உண்மை நிலைமைக்கு முகம் கொடுப்பதற்கு தயாராகும் பிரிவினர், நிரந்தர சமாதானத்தையும் சிறந்த வாழ்க்கை முறையொன்றையும் எதிர்பார்க்கும் பிரிவினர் ஆகிய சகலரும் இந்த கோரிக்கையை வெற்றிகரமானதாக்கிக் கொள்வதற்கு ஒன்றுபட வேண்டும். எந்தவிதமான ஜாதி, மத வேறுபாடுகளுமின்றி சிங்கள சகோதர சகோதரிகளிடமிருந்தும் நாம் இதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம். இது யாரிடமிருந்தும் பழிவாங்கும் முகமாக கொண்டுவரும் ஒன்றல்ல. சகலருக்கும் சட்டத்தின் சாதாரண நிலையையும் உண்மை நிலையையும் நிறைவேற்றும் பொருட்டு கொண்டு வந்த ஒரு கோரிக்கையாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது புலிகளின் நம்பிக்கைக்குரிய டயஸ்போராவினருடன்  தமிழ் இனவாதிகள் வகித்த நிலையானது தமிழ் மக்கள் தேர்தலை எதிர்க்க வேண்டும் என்பதாகும். என்றாலும் தமிழ் மக்கள் அந்த கோரிக்கையை நிராகரித்து சர்வாதிகார மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்காக வாக்குகளை வழங்கினர். சர்வாதிகார ஆட்சியை கவிழ்ப்பதே ஜனநாயகத்திற்காக இருக்கும் அபிலாஷையின் வெளிப்பாடாகும். தமிழ் மக்கள் அதற்காக விதிமுறைகளை விதிக்கவில்லை. தமிழ்த்தலைவர்கள் விதிமுறைகளை முன்வைத்தாலும் தமிழ் மக்கள் அவற்றிற்காக கவனமெடுத்ததாக தெரியவில்லை.

சாதாரண தமிழ் மக்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக காட்டிய இந்த ஒத்துழைப்போடு தமிழ்த் தீவிரவாதிகள் மாத்திரமன்றி தமிழ் தேசியவாதிகளும் கஸ்டத்திற்குள்ளாகியிருப்பது தெரிகிறது. வடக்கில் தமிழ்ச் சமூகம் இனவாத ஈழத்திற்குள் கட்டுப்பாட்டை மீறிச்சென்று முழு இலங்கையையும் தமது நாடாக கருதி, கொழும்பு அரசாங்கத்தின் அதிகாரத்திற்குள் முன்னின்று இன ஒற்றுமையையும் ஜனநாயக ஒத்துழைப்புடன் காட்டிய இந்த முயற்சி தமது முன்னேற்றத்திற்கு பாதிப்பேற்படும் என்பதை அவர்கள் அறிவர்.

இச்சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மத்தியஸ்த அதிகாரத்தை சிவாஜிலிங்கம் போன்ற இனவாதிகள் தஞ்சமடைவதற்கான நிலை ஏற்படுவது வேறு காரணங்களுக்காக அன்றி உள்வாரி அதிகார குழப்பத்தினாலாகும். தமிழர் கூட்டமைப்பின் ஆனந்தி சசிதரன், எம்.கே. சிவாஜிலிங்கம் போன்ற புலிகளின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் நிரந்தரமாக முயற்சிப்பது இனவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டு தாம் பிரபல்யமடைவதற்காகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இந்த இரு தரப்பினரும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வடக்கு மாகாண சபையின் அதிகாரிகள் முகம் கொடுக்கும் முதன்மைப் பிரச்சினை வேறொன்றுமன்றி தங்களிடம் இருக்கும் பதவிகளை பயன்படுத்தி பயனுள்ள சேவையொன்றை மக்களுக்கு வழங்குவதற்கு பின்நின்றமையாகும்.

இவையாவன எதிர்ப்பு அரசியலின்போது வெற்றிபெற்ற உலகிலுள்ள அதிகமான அரசியல் கட்சிகள் மூலம் அனுபவம் பெற்றுள்ள நிலைமையாகும். எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதவிக்கு வந்தாலும் அரச அதிகாரத்திற்கு அலங்கரிக்கப்படும்போது, எதிர்ப்பாளர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கெட்டிக்காரர்கள் ஆனதில்லை. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் வெற்றி பெற்றாலும் நேபாளத்தில் எதிர்ப்பாளர்களிலிருந்து டில்லியின் கெஜ்ரிவால் வரை அதிகமானோரின் பொது அனுபவமாவது வெற்றிபெறாத அரச ஆட்சியாகும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட தன்னுடைய தோல்வியை மறைத்துக் கொள்வதற்கு செல்வது இனவாதிகளுடன் ஒன்றுபட்டு ஒரே சால்வையை பங்கிட்டுக் கொண்டாகும். இனவாதத்திற்கு பொறுப்புகள் இல்லை. ஆகையால் இனவாத அரசியல் மிகவும் இலேசானதாகும். ஆகையால் சிங்கள, தமிழ் ஆகிய இரண்டு சமூகங்களிலும் அரசியல்வாதிகள் இனவாத யுத்த கோஷ பெனர்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் வரை உமிழ்நீர் வடித்துக் கொண்டிருப்பது உண்மையாகும். சமூகமொன்றை இனவாதத்திற்கு எதிராக தூண்டி விடுவது இலேசான காரியமல்ல. என்றாலும் இனவாதத்தினால் அதிகாரத்தை ஏற்ப்படுத்தல் கஸ்டமான காரியமல்ல.

அதிகாரத்திற்காக இனவாதத்தை பயன்படுத்துவதில் சூரனாக விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ உட்பட இனவாத தலைவர்கள் மூலம் கடந்த ஒன்பது வருட காலத்திற்குள் சிங்கள சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டாயப்படுத்தல் இலேசான காரியமல்ல என்பதற்கு கடந்த பெப்ரவரி 18ம் திகதி நுகேகொட கூட்டம் சாட்சியாகும். மஹிந்த ராஜபக்ஷவிற்கு முன்னர் சிங்கள சமூகம் இனவாதிகளல்லர் என்பது அதன் மூலம் கருத்துப்படவில்லை. என்றாலும் மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தை அதிகபட்சம் பயன்படுத்திய ஒருவராவார். புதிய அரசாங்கத்திற்கு அவர் இன்னும் மிகப்பயங்கரமான சவாலாகும். விமல் வீரவன்ச போன்ற அவரின் பின்னால் இருப்பவர்கள் அமைதிக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக மக்களை தூண்டி விடுவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழர் பிரச்சினையை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கு பிரதான காரணி இனவாதமாகும். என்றாலும் மைத்திரிபால சிறிசேனவை போன்றே மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பணிகளின் உள்ளேயும் மாகாண சபைகளை கலைத்தலைப் போன்று தீவிரவாத யுத்த கோஷம் இருக்கவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது மாகாண சபைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பாகும். மாகாணசபைக்கு சொந்தமான அதிகாரங்கள் அதிகம் உள்ளன. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இல்லாமலும் மாகாண சபைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரம் உள்ளது. விசேடமாக கல்வி, சுகாதாரம் போன்ற பொதுமக்கள் சேவைகளின்போதும் கமத்தொழில் நிறுவனங்கள், கடற்றொழில், சிறிய மற்றும் மத்திய பரிமான கைத்தொழில் போன்ற துறைகளில் மாகாண சபைக்கு குறிப்பிடப்பட்ட அளவிலான வேலைகளைச் செய்வதற்கு முடியுமாக இருக்கும். தற்போதிருக்கும் அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு பயனுள்ள சேவையொன்றை வழங்குவதென்றால் முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதற்கும் அதிகாரங்களை இலேசுபடுத்திக் கொள்வது சம்பந்தமாக உரையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதனை சாதகமாக்கிக் கொள்ள முடியும்.

புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சினையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு தொடர்புபட்ட  எதிர்கால தன்மையை எதிர்க்க முடியாது. அது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வடக்கு ஆளுநராக முன் அனுபவம் உள்ள அரச அதிகாரியொருவரை நியமித்து அரசாங்கத்தின் மூலம் முக்கியமான சமிக்ஞையொன்று விடுக்கப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  அரச கட்சியாக பெயர் கூறப்படகூடியதாக இருந்தமைக்கான காரணம், தெற்கில் அரசாங்கத்துடன் எதிர்கால கலந்துரையாடலுக்கு தயாராகுவதாகும். வடக்கிலும் தெற்கிலும் வேர் இறங்கியிருக்கும் இனவாதத்திற்கு நடுவால் முன்னோக்கிச் செல்வதென்றால் வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தில் புரிந்துணர்வொன்றை மேலோங்கச் செய்ய வேண்டும்.

என்றாலும் அதிகாரம் மாற்றத்திற்குள்ளாகி குறுகிய காலகட்டத்திற்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மூலம் வேறுபட்ட நிலைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அதிகாரத்திற்கு தமிழர் பிரச்சினையை எடுத்துக்கூறுவதற்கு போதுமான காலத்தைக் கொடுக்காமல் கொண்டு வரப்பட்ட இந்த இனவாத படுகொலை கருத்தை தமிழ் இனவாதிகள் சார்பில் எடுத்துக்கொண்டால் அவை குறிப்பிடக்கூடிய வெற்றியாகும். அவர்களின் மகிழ்ச்சியை அதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் தெற்கில் சிங்கள மக்களுக்கிடையிலும் அதிகார குழுக்களிடையிலும் நல்லவிதமான இணைந்த சம்பந்தமொன்றை ஏற்படுத்தல் இனவாதத்தில் தங்கிவாழும் சிங்களவா; போன்றே தமிழ் இனவாத புழுக்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இனசுத்திகரிப்பு யோசனை சிறந்த உணவாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை மாற்றியமைப்பதற்கான காரணிகளாக முன்வைப்பது வடக்கில் உயர் பாதுகாப்பு  வலயங்களை அகற்றுவது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களையாகும். அரசாங்கம் பதவியேற்றவுடனேயே வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி, தமிழ் மக்களின் காணிகளை திரும்பவும் கையளிக்குமளவிற்கு இந்த அரசாங்கம் சக்தியுள்ளதாகவோ அல்லது பிரசித்தி பெற்றதாகவோ இல்லை என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறான அதிரடி நடவடிக்கையொன்று இன்னும் பிரசித்தி பெற்ற நிலையிலிருக்கும் நுகேகொட கூட்டத்தினூடாக அடையாளப்படுத்தப்பட்ட சக்தி சிறந்த ஏணியாக இருக்கும் என்பது தெளிவாகும். ஜனவரி 9ம் திகதி ராஜபக்ஷவின் முகாமில் இனவாதிகளின் மூலம் நாடு பூராவும் பரப்பப்பட்டுக் கொண்டிருந்த வதந்திகளை நினைத்துப் பாருங்கள். வடக்கு புலிகளின் நம்பிக்கைக்குரியவர்கள் இராணுவ முகாம்களை சுற்றிவளைத்து அவற்றை கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே அதன் மூலம் கூறப்பட்டது. இந்த வதந்திகளை பரப்பியது சம்பந்தமாக விமல் வீரவன்சவின் மைத்துனர் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் குறி வைத்தது, இராணுவத்தையும் இராணுவ படையினரின் குடும்பங்களையும் சிங்கள இனவாதிகளையும்  அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக  அவர்களை ஏவி விடுவதற்காகும்.

கடந்த ஆட்சியின் போது, தேசிய பிரச்சினைக்குப் பதிலாக லஞ்ச ஊழல் மற்றும் வேறு குற்றங்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரச்சினையை கவனத்திலெடுங்கள். அப்போது, பொலிஸ், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைப் கொமிஷன், சட்டமாஅதிபர் திணைக்களம் மற்றும் சட்டமன்றத்தை நடைமுறைப்படுத்திக் கொள்ள அரசிற்கு எந்தளவு கஸ்டமாகியுள்ளது என்பது பற்றி தேடிப் பாருங்கள். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்து வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்ட சில அரசியல்வாதிகள் கூட தற்போது அமைச்சர்களாகி இந்த நடவடிக்கைகளுக்கு குறுக்காக விழுந்த தடைக்கட்டையாகியுள்ளனர். விமல் வீரவன்சவின் மனைவியின் போலி அடையாள அட்டை தொடர்பான ஆவணங்கள் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்திலிருந்து காணாமல் போயிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மிகப் பாரியளவிலான ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் சம்பந்தமான சாட்சிகள் மீதியாக உள்ளதா என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஊழல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காதது பற்றி பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகி ‘எங்கே இதைச் செய்தீர்களா?’ என்று கேட்பவர்கள் இந்தக் காரணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்பது வருடங்கள் அல்லது அதற்கும் மேலதிகமான காலங்களாக ஒழுக்கமற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள நாட்டை நூறு நாட்களுக்குள் பூரணமான மீள்திருத்தம் செய்வதாக கேட்டுக்கொண்டு, அவ்வாறு செய்ய முடியாவிட்டால் அதனை அவமதிப்பிற்குள்ளாக்குவதும் ஒழுக்கமற்ற செயற்பாட்டின் ஒரு அங்கமாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யோசனை தமிழ் இனவாதிகளின் மகிழ்ச்சிக்கு காரணமாகியிருந்தாலும் அதனை ஒரு வகையில்  திடீரென வெளிப்படும் ஒன்றாக கருதுவது பிழையானதல்ல. ஏனெனில் இந்த கோரிக்கையில் இருக்கும் அதிவேகமான தன்மையினால் அதற்கு தேசிய ரீதியாக அல்லது சர்வதேச ரீதியாக எந்தவொரு வரவேற்பும் கிடைக்காது. குறைந்த பட்சம் தமிழ் நாட்டிலிருந்தாவது அதற்கு ஒத்துழைப்பொன்றை பெறுவதற்கும் முடியாமல் போயுள்ளது.

1948ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளை தடுப்பது மற்றும் அவற்றிற்கு தண்டனை வழங்கும் உடன்படிக்கையில் படுகொலை என்பது என்ன என்பது பற்றி வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப அந்த அநியாயங்கள் இடம்பெறுவதென்றால் அவ்வாறான படுகொலைகளை செய்வதற்கான உள்நோக்கம் மற்றும் குறிவைத்த நடவடிக்கைகள் ஆகிய இரண்டும் இருக்க வேண்டும்.

உடன்படிக்கையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசகங்கள் மூலம் இவை மேலும் தெளிவுபடுத்தப்படும். அதுபோல், இனத்திற்கு, இனம்சார்ந்த அல்லது மதம் சார்ந்த மக்களுக்கு எதிராக செய்யும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் கொலை நடவடிக்கையாக கருத முடியும். அந்தக் குழுவின் அங்கத்தவர்களை கொலை செய்தல், அந்தக் குழுவின் அங்கத்தவர்களுக்கு உடம்பு ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்பமேற்படுத்துதல், அந்தக் குழுவினருக்கு மொத்தமாக அல்லது பக்கச்சார்பாக இயற்கை அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கை முறையொன்றை சிந்தித்து செயற்படுத்துதல், குழுக்களுக்கிடையே தன்னிச்சையாக செயற்படுதல் அந்தக் குழுவின் பிள்ளைகளை பலாத்காரமாக வேறு குழுக்களில் இணைத்து விடல்.

இதற்கேற்ப, படுகொலை, படுகொலைகளை செய்வதற்கு சூழ்ச்சி செய்தல் படுகொலைக்காக சாதாரணமாக அல்லது வக்கிரமாக ஆதரவு வழங்குதல், படுகொலையொன்றைச் செய்வதற்கு முயற்சித்தல் மற்றும் படுகொலைக்கு ஒத்துழைப்பு வழங்குதல் ஆகிய காரணிகள் தொடர்பில் தண்டனை கிடைக்கப்பெறலாம். இலங்கை இந்த உடன்படிக்கைக்கு உடன்பட்ட நாடாகும்.

இலங்கையில் தமிழர் படுகொலையொன்று இடம்பெற்றுள்ளதென்பது  மிகைப்படுத்திய கூற்றொன்று என்பது எனது கருத்தாகும். இலங்கையில் அரசாங்கத்தின் மூலம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மை. என்றாலும் அவை படுகொலை செய்யும் நோக்குடன் செய்யப்பட்டவை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஹிட்லர், யூதர்கள் தொடர்பில் செய்தது போல் பொஸ்னியாவில் ஸ்லோபொடான் மிலொசெவிக் அரசு முஸ்லிம்கள் தொடர்பில் செய்தது போல் அல்லது ருவன்டாவில் உடு இனத்தவர்கள் டுட்சி இனத்தவர்களுக்கு எதிராக செய்தது போல் இலங்கையில் இடம்பெறவில்லை என்பது எனது எண்ணமாகும்.

என்றாலும் இலங்கையில் நீண்டகாலமாக இன ஒடுக்குமுறையொன்று இருந்ததை நான் ஏற்றுக் கொள்வேன். அப்போது, கொழும்பை கேந்திர நிலையமாக கொண்ட சிங்கள அரசாங்கம் நீண்ட காலமாக தமிழ் மக்களை அடிமைப்படுத்தியதாகவும் தமிழ் மக்கள் மிகவும் ஜனநாயக அரச மீள்நிர்மாணம் தொடர்பில் செய்த வேண்டுகோள்களை நிராகரித்து நடவடிக்கை எடுத்ததும் உண்மையாகும். தமிழீழ யுத்தம் அதன் பிரதிபலிப்பாகும். என்றாலும் யுத்தத்தின் பிரதிபலன் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியது முழுமையாக கொழும்பு அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ அல்ல. இந்த இரு தரப்பினரும் நிராயுத சிவில் மக்களை கொன்றனர். யுத்தநாச வேலைகளில் ஈடுபட்டனர். புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவம் அழிந்தவுடனேயே அவர்கள் யுத்த அநியாய முறைப்பாடுகளிலிருந்து குற்றமற்றவர்களாக மாட்டார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை போன்றே விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் எதிராக யுத்த அழிவு தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன.

இன அடக்கியொடுக்குதல் பல தளங்களினூடாகவும் இடம்பெற்றன. ஒரு தளத்தினூடாக சிங்கள தலைமைத்துவத்துடனான அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அதிகாரத்தைக் கொண்டு அடக்கியொடுக்கியதோடு, மற்றொரு தளத்தினூடாக தமிழ் யுத்த அரசியல் மூலம் முஸ்லிம் மக்களை அடக்கியொடுக்கியது. அடக்கியொடுக்குதல் மற்றும் படுகொலை செய்தல் என்ற இரண்டிற்குமிடையே வேறுபாடொன்று உள்ளது. படுகொலை என்ற கருதுகோலுடன் செல்லும் மற்றுமொரு கருதுகோலான இன சுத்திகரிப்பு என்ற கருத்து தமிழ்த் தலைவர்களுக்கு பொருத்தமானதாகும். புலிகள் இயக்கம் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை துரத்தியடித்து, அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்த முறை இன சுத்திகரிப்பு என முஸ்லிம் மக்களின் சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் நான் நினைப்பது என்னவெனில், இந்த நிகழ்வுகளை பகுத்தாய்வு செய்யும் முகமாக படுகொலை மற்றும் இன சுத்திகரிப்பு ஆகிய கருதுகோள்கள் கடுமையானவை என்பதாகும்.

எது எவ்வாறாயினும், இது சர்வதேச விசாரணைக்கு எடுக்கப்படுவது மிகவும் நல்லது. சிங்கள அரசாங்கம் இன சுத்திகரிப்பு ஒன்றில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு முழு சிங்கள இனத்திற்கும் விடுக்கப்படும் குற்றச்சாட்டாகும். அது சர்வதேச ரீதியாக பரீட்சிக்கப்படக் கூடாத செயலொன்றல்ல. அரசாங்கத்தை விட சிங்கள மக்களுக்கு இது தொடர்பில் கருத்துக்களை கூறுவதற்கு அதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும். அவ்வாறே முஸ்லிம் மக்களுக்கும் தங்களுடைய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பில் திறந்த பேச்சுவார்த்தையொன்று இடம்பெற வேண்டும்.