Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

அரசாங்க காணியொன்றை சிரந்திக்கு மஹிந்த கொடுத்துள்ளார்


- லசந்த ருஹுனகே

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது மனைவி சிரந்தி ராஜபக்ஷவுக்கு சொந்தமான கால்டன் பாலர் பாடசாலைக்காக தெஹிவளை, அத்திடிய, கலாபுர என்னுமிடத்திலுள்ள 70 பேர்ச்சஸ்களை கொண்ட காணியொன்றை குத்தகை உறுதி அடிப்படையில் கொடுத்திருப்பதாக காணி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி என்ற முறையில் மஹிந்த ராஜபக்ஷவினால் கைச்சாத்திடப்பட்டு 30 வருட கால குத்தகை அடிப்படையில் அவரது மனைவியின் கால்டன் பாலர் பாடசாலைக்காக இந்த காணி 2013ம் ஆண்டில்  கொடுக்கப்பட்டிருகிறது.

சிரந்தி ராஜபக்ஷவினால் அத்திடிய பிரதேசத்திலேயே வேறொரு இடத்தில் வாடகை அடிப்படையில் கால்டன் பாலர் பாடசாலை நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே அதனை மேலும் விருத்திசெய்யும் நோக்குடன் இந்த காணி கொடுக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக அரசாங்கத்தின் காணியொன்று குத்தகை உறுதி அடிப்படையில் நபர் ஒருவருக்கு கொடுக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக கெசட் பத்திரம் மூலம் அதனை அறிவித்து எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு மூன்றுவார கால அவகாசம் கொடுக்கப்படும். ஆனால், சிரந்திக்கு அந்த காணி  கொடுக்கப்பட்டபோது அவ்வாறான எந்தவொரு கெசட் பத்திர அறிவித்தலும் செய்யப்பட்டிருக்கவில்லை.

கலாபுரவில் இருக்கும் அந்த காணி  அங்கு வசிப்பவர்களின் தேவைக்காக கலைக்கூடமொன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

கலாபுர காணி டவர் மண்டபம் என்ற அடிப்படையில் இருந்த காலத்தில் அந்த பொது காணி தேசிய சிறுவர் கல்வி என்ற அடிப்படையில் பவகிரியே சோமதன்ச என்ற பெயருடைய தேரரொருவருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த சமயத்தில் அத்தேரரால் முடிக்கப்படாத கட்டிடமொன்றும் கட்டப்பட்டிருந்தது.

சிரந்தி ராஜபக்ஷ கலாபுரவிலுள்ள அந்த பொது காணியை பெற்றுக் கொண்டுள்ளார் என்ற செய்தி அங்கு வாழும் கலைஞர்களுக்கு தெரிந்திருப்பது ஆட்சி மாற்றத்தின் பின்னராகும். அவ்வாறு தெரிந்துகொள்ள காரணமாக இருந்தது சிலர் அக்காணிக்குள் வந்து குறித்த காணியை சுத்தம் செய்தபோதுதான். அப்போது கலைஞர்கள் அவர்களிடம் விபரம் கேட்டபோதுதான் அவர்கள், சிரந்தி ராஜபக்ஷவின் உத்தரவின்படிதான் தாங்கள் அங்கு வந்ததாக கூறியுள்ளார்கள். அது தொடர்பில் அங்கு வசிப்பவர்கள் பொலிசாருக்கு தகவல் கூறியுள்ளார்கள். பொலிசார் அவ்விடத்திற்கு வந்தபோது, இடத்தை சுத்தம் செய்ய வந்த ஒருவர் ‘மெடம் கதைக்கிறார்” என்று கூறி தனது கையடக்க தொலைபேசியை அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் ஒருவரிடம் கொடுத்துள்ளார். பொலிஸ் அதிகாரிக்கு அந்த ‘மெடம்’ என்ற பெண் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறும் அது தொடர்பில் பொலிசாருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தங்களுடைய பொதுவான கலை நடவடிக்கைகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த காணியை பெற்றுக்கொள்வதற்காக கலாபுர வீட்டு ஆதார நிலையம் தற்போது புதிய அரசாங்கத்தின் காணி அமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதுடன், அதற்கு முன்னர் அந்த இடத்தை பெற்றுத்தருமாறு கோரி கலாபுரவில் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தினர்.